gabriella charlton| ’என்னை வாழ விடுங்க’ - நெட்டிசன்கள் கேள்வியால் கடுப்பான பிக்பாஸ் புகழ் கேப்ரில்லா!
” சினிமாவில் எதிர்காலம் உங்களுக்கு பிரகாசமாக இருக்கும் நிலையில் ஏன் சீரியல் போன்ற சின்ன விஷயத்தில் நடிக்கிறீர்கள் ?’
கேபி என்று செல்லமாக அழைக்கப்படும் கேப்ரில்லா சார்ல்டன் தன் சிறு வயதிலேயே விஜய் தொலைக்காட்சியின் `ஜோடி ஜூனியர்’ என்ற குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியில் பங்கேற்றவர். தொடர்ந்து அவர் `ஏழாம் வகுப்பு சி பிரிவு’ என்ற பள்ளிக் குழந்தைகள் பற்றிய தொடரிலும் நடித்தார். விஜய் தொலைக்காட்சியின் `ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் பங்கேற்ற கேப்ரியல்லா, அதில் வெற்றியாளராகவும் மகுடம் சூட்டினார். தற்போது சின்னத்திரையில் நடித்து வரும் கேப்ரில்லா அவ்வபோது திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக தலைக்காட்டியுள்ளார்.
View this post on Instagram
தனுஷ் நடித்து, ஐஷ்வர்யா தனுஷ் இயக்கிய `3’ படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்தவர் கேப்ரில்லா. தொடர்ந்து அவர் சரத்குமார் நடித்த `சென்னையில் ஒரு நாள்’ படத்திலும், சமுத்திரகனி இயக்கி, நடித்த `அப்பா’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். விஜய் டிவியின் கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசனுக்கு பிறகு சேபல் தயாரிக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான , பிக்பாஸ் ஜோடிகள் , சிங்கிள் பசங்க உள்ளிட்ட ஷோக்களில் கலக்கி வந்த கேப்ரில்லா. தற்போது ஈரமான ரோஜாவே சீரியலின் அடுத்த பாகத்தில் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கேபி சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ” சினிமாவில் எதிர்காலம் உங்களுக்கு பிரகாசமாக இருக்கும் நிலையில் ஏன் சீரியல் போன்ற சின்ன விஷயத்தில் நடிக்கிறீர்கள் ?’ என் கேட்க, அதற்கு பதிலளித்த கேபி , “எல்லா மீடியமும் ஒன்றுதான்..நடிகர்கள் தங்கள் பங்களிப்பை கொடுக்கத்தானே வேண்டும். தினமும் ஒருவரின் வீடு தேடி செல்வது அவ்வளவு எளிதான காரியமில்லை“ என புரியும் படி பொதுவாக விளக்கம் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மற்றொரு ரசிகரும் அதே மாதிரியான கேள்வி கேட்க , இதனால் கடுப்பான கேப்ரில்லா “ உங்க கிட்ட நான் கருத்து கேட்டேனா? இல்ல உங்க வேலையை பற்றி நான் கமெண்ட் பண்ணேனா? வாழ விடுங்க” என கொந்தளித்துள்ளார். முதன் முதலாக ஒரு வேலையை தன்னமிக்கையுடன் தொடங்கும் பொழுது, இப்படியான கேள்விகள் சற்று நெகட்டிவ் வைபை ஏற்படுத்துவதாகத்தானே இருக்கும்.
.