மேலும் அறிய

Veerappan: ‘வீரப்பன் காவல்துறை, ராணுவத்தில் இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருப்பார்’ - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார்..!

வீரப்பனின் மரணம் இரு மாநில அரசுகளுக்கும் மிகப்பெரிய அளவில் நிம்மதியை கொடுத்திருந்த நிலையில் சமீப காலமாக அவர் பற்றிய பேச்சு தான் எங்கும் உள்ளது. 

வீரப்பன் காவல்துறைக்கோ, ராணுவத்துக்கோ சென்றிருந்தால் மிகப்பெரிய அளவில் வந்திருப்பார் என நேர்காணல் ஒன்றில் முன்னாள் காவல்துறை அதிகாரி விஜயகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு மற்றும் கர்நாடக ஆகிய இரு மாநிலங்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய சந்தன கடத்தல் வீரப்பன் கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தமிழக காவல்துறை அதிரடி படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பனின் மரணம் இரு மாநில அரசுகளுக்கும் மிகப்பெரிய அளவில் நிம்மதியை கொடுத்திருந்த நிலையில் சமீப காலமாக அவர் பற்றிய பேச்சு தான் எங்கும் உள்ளது. 

The Hunt For Veerappan

கடந்த ஆகஸ்ட் மாதம் netfix ஓட்டிடி தளத்தில் The Hunt For Veerappan என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் வெளியானது.  நான்கு எபிசோடுகளைக் கொண்ட அந்த ஆவணப்படம் வீரப்பன் எப்படி காட்டுக்கு ராஜா ஆனார் என்பது முதல் அவனை சுட்டு வீழ்த்தியது எப்படி என்பது வரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.  செல்வமணி செல்வராஜ் இயக்கிய இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தொடங்கி பல்வேறு பத்திரிக்கை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பான விவரங்களை பேசி இருந்தார்கள்.

கூச முனுசாமி வீரப்பன்

இந்த ஆவணப்படம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய அடுத்த இரண்டு மாதத்தில் “கூச முனுசாமி வீரப்பன்” என்ற பெயரில் வீரப்பனின் கதை zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி பலத்த அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. 

ஏற்கனவே வீரப்பனின் கதை படமாக சீரியலாக எடுக்கப்பட்டு வெளியான நிலையில் தற்போது ஆவணப்படமாக எடுக்கப்பட்டு வருவது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. zee5 ஓடிடி தளத்தில் வெளியான படத்தில் வீரப்பன் தனது வாழ்க்கை குறித்து தானே பேசும் அத்தனை வீடியோக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

வீரப்பன் பற்றி விஜயகுமார்

இப்படியான நிலையில் வீரப்பனை சுட்டுக்கொன்ற தமிழக காவல்துறை அதிரடி படைக்கு தலைமை தாங்கிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நேர்காணல் ஒன்றில் வீரப்பன் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவரிடம், “வீரப்பன் ஒரு குற்றவாளி என்பதையும் தாண்டி உங்கள் பார்வையில் அவர் யார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு, “எங்கள் குழு வீரப்பனை சுட்ட போது அவருக்கு வயது 52 ஆகிறது. என்னை விட வீரப்பன் ஒரு வயது, ஆறு மாதங்கள் மட்டுமே மூத்தவர். அவர் காவல்துறைக்கோ அல்லது ராணுவத்திற்கு சென்றிருந்தால் மிகப்பெரிய அளவில் வந்திருப்பார். காரணம் அசாதாரணமான தைரியம் புத்திசாலித்தனம் துப்பாக்கி சுடுவதில் தேர்ந்தவர் என பல திறமைகளை கொண்டிருந்தார்.

அதை சரியான அளவில் நேர்மறையாக பயன்படுத்தியிருந்தால் வீரப்பன் வேறு மாதிரி ஆகி இருப்பார். அதே சமயம் வீரப்பன் உடலை பிரேத பரிசோதனை செய்த வள்ளிநாயகம் என்ற மருத்துவர், என்னிடம் நீங்கள் வீரப்பனின் வயது 52 என சொல்லாமல் இருந்திருந்தால் நான் அறிக்கையில் 25 என்று மதிப்பிட்டு இருப்பேன் என கூறினார். அவருடைய உடலில் உள்ள எலும்புகளில் வயதிற்கு ஏற்ற எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர் தெரிவித்ததாக விஜயகுமார் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் உடனே பதிவு செய்யுங்க
பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் பதிவு செய்யுங்க
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
"வேற நாடா இருந்தா RSS தலைவரை கைது செஞ்சிருப்பாங்க" கொதித்த ராகுல் காந்தி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் உடனே பதிவு செய்யுங்க
பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் பதிவு செய்யுங்க
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
"வேற நாடா இருந்தா RSS தலைவரை கைது செஞ்சிருப்பாங்க" கொதித்த ராகுல் காந்தி!
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன?  என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன? என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
அமைச்சர் பொன்முடி நியாயவாதியா ?   நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? கோபத்தின் உச்சியில் அன்புமணி
அமைச்சர் பொன்முடி நியாயவாதியா ? நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? கோபத்தின் உச்சியில் அன்புமணி
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
Embed widget