Florent Pereira: புளோரன்ட் பெரேரா 2-ம் ஆண்டு நினைவு நாள்... புகைப்படத்தோடு நினைவுகூர்ந்த சீனு ராமசாமி
புளோரன்ட் பெரேராவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரின் நினைவுகளை ட்விட்டரில் த்ரோபேக் புகைப்படத்தோடு பகிர்ந்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.
பத்திரிகையாளராக பல வருடங்கள் பணியாற்றிய பிறகு நடிகர் விஜய் நடித்த 'புதிய கீதை' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் புளோரன்ட் பெரேரா. இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான "கயல்" திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். 67 வயதான புளோரன்ட் பெரேரா 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.
கொரோனா பாதிப்பு :
புளோரன்ட் பெரேரா வேலையில்லா பட்டதாரி 2 , தொடரி, முப்பரிமாணம், தரமணி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வந்தார். தனது 67 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க கூடியவர். புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருந்தார். அதற்கான பணிகளில் ஈடுபட்டு இருந்த போது தான் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Remembering Dear my beloved father Florent Pereira ( dharmadurai Pereira ) on his death anniversary , inspiring personality overflowing with love and affection pic.twitter.com/QjiAvXXJ6J
— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) September 14, 2022
இரண்டம் ஆண்டு நினைவு நாள்:
புளோரன்ட் பெரேராவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரின் நினைவுகளை ட்விட்டரில் த்ரோபேக் புகைப்படத்தோடு பகிர்ந்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் தமிழ் சினிமாவில் கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இவர்கள் இருவரும் தர்மதுரை படத்தில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள்.
ஊக்கம் தரும் மனிதர்:
இயக்குநர் சீனு ராமசாமி தனது பதிவில் புளோரன்ட் பெரேரா மிகவும் அன்பும் பாசமும் நிறைந்த இன்ஸ்பைரிங் மனிதர் என பதிவிட்டு இருந்தார். தர்மதுரை படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை நம்மோடு பகிர்ந்துள்ளார் சீனு ராமசாமி.
விஜய் சேதுபதியின் குருநாதர்:
சீனு ராமசாமி திரைக்கதை பொதுவாக கிராமத்து பின்னணியில் இருப்பதால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக விளங்கும் நடிகர் விஜய் சேதுபதியை "தென் மேற்கு பருவக்காற்று" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது. பல பேட்டிகளில் விஜய் சேதுபதி கூறுகையில் " எங்கள் இருவருக்கும் இருக்கும் உறவு ஆசிரியர் மாணவர் உறவு. என்றுமே அவர் எனது குருநாதர்" என கூறியுள்ளார் விஜய் சேதுபதி. மேலும் அவருக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை சூட்டியது இந்த இயக்குனரே. தென் மேற்கு பருவக்காற்று படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மாமனிதன்.