Kalaignar 100: ‘கலைஞர் 100’ விழா ஒத்திவைப்பு... காரணம் இதுதான்.. புதிய தேதியை அறிவித்த திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்!
Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு விழா மிக்ஜாம் புயல் மீட்பு பணி காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
![Kalaignar 100: ‘கலைஞர் 100’ விழா ஒத்திவைப்பு... காரணம் இதுதான்.. புதிய தேதியை அறிவித்த திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்! Film Producers Association announces postponement kalaignar 100 program Kalaignar 100: ‘கலைஞர் 100’ விழா ஒத்திவைப்பு... காரணம் இதுதான்.. புதிய தேதியை அறிவித்த திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/08/9040d6f7de3f04bb04b9d661eda374171702022125604571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ (Kalaignar 100) பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.
கருணாநிதியின் திரைப்பயணம் மற்றும் சாதனைகளை கொண்டாடும் விதமாக அவரின் நூறாவது ஆண்டை சிறப்பிக்க ‘கலைஞர் 100’ என்ற நிகழ்ச்சியை நடத்த திரைத்துறையினர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் மீட்பு பணிகள் நடைபெற்று வருதால் இந்நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கலைஞர் 100 என்ற மாபெரும் கலைஞர் நூற்றாண்டு விழா வருகிற 24.12.2023 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தோம்.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் மக்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளார்கள்.
மேலும், முதல்வர் அவர்களும் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார்கள். இவைகளைக் கருத்தில் கொண்டு 24.12.2023 அன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா 06.01.2024 சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என்று தெரிவித்து கொள்கிறோம்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் மீட்பு பணி காரணமாக சென்னையில் நடைபெற இருந்த கார் பந்தயமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக இந்த கார் பந்தயம் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டது. தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைவது போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், புயல் காரணமாக கார் பந்தயம் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் காலவரையின்றி கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
கரூரில் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கத்தின் 3ஆம் ஆண்டு குத்து விளக்கு பூஜை - திரளான பக்தர்கள் பங்கேற்பு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)