கரூரில் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கத்தின் 3ஆம் ஆண்டு குத்து விளக்கு பூஜை - திரளான பக்தர்கள் பங்கேற்பு
300-க்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கு ஏற்றி தங்கள் குலம் தழைக்க ஐயப்பனை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
தாந்தோணி மலையில் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம் குருமார்கள் மற்றும் பக்தர்கள் நடத்தும் மூன்றாம் ஆண்டு குத்து விளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம், தாந்தோணி மலை பகுதியில் உள்ள ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோயில் அருகே ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் குருமார்கள் மற்றும் பக்தர்கள் நடத்தும் மூன்றாம் ஆண்டு குத்து விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, டிசம்பர் ஒன்றாம் தேதி மாலை, தான்தோன்றி மலை, சத்தியமூர்த்தி நகர் முதல் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் முன்பாக 7 சக்தி கன்னிகளுக்கு அருள் அளித்து, நெய்விளக்கு ஏந்தி ஸ்ரீ ஐயப்பன் ஆழி ஊட்டப்படும். இந்த நிகழ்ச்சிகளில் பொன் பாண்டுரங்க குருசாமி, விவிபி ராஜா லந்தகோட்டை பிச்சை குருநாதர், துணை குருநாதர் கருப்பசாமி ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் மாலை 5 மணிக்கு ஆழி யாகம் நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்வுகளை தொடர்ந்து ஆறாம் ஆண்டு பூக்குழி ஆழி திருவிழாவும் நடைபெறும் எனவும் ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோவில் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்ற குத்து விளக்கு பூஜைக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் குருமார்கள் மற்றும் பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கு ஏற்றி தங்கள் குலம் தழைக்க ஐயப்பனை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.