Jawan Trailer: இவங்க கண்ணுக்கு மட்டும் எப்டிதான் மாட்டுதோ.. ஜவான் ட்ரெய்லரில் விஜய்யைப் பாத்தீங்களா.. வைரலாகும் புகைப்படம்!
அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படத்தில் ட்ரெய்லரில் நடிகர் விஜய் தோன்றுவதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் நடிப்பில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் அட்லீ இயக்கியுள்ள திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது முதலே பெரும் பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.
படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி என்று நட்சத்திர பட்டாளங்கள் குவிந்ததும், படத்தின் பர்ஸ்ட் லுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அட்லீ முதன் முதலில் இந்தியில் இயக்கியுள்ள இந்த படத்தை ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்த படம் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளில் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாக உள்ளது.
தற்போது ஜவான் படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில் . டிரைலரில் விஜய் இருப்பதாக கூறிவருகிறார்கள் நெட்டிசன்ஸ்.
விஜய்
அட்லீ இயக்கத்தில் மூன்று படங்களில் நடித்திருக்கிறார் விஜய். தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியது முதல் அட்லீ - விஜய் இடையே நல்ல நட்புறவு இருந்து வருகிறது. ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கிறார் என்கிறத் தகவல் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை ஆனால் வெளியானதும் காட்டுத்தீப்போல் பரவியது.
ஆனால் படக்குழு சார்பாக எந்தவிதமான தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தற்போது ஜவான் படத்தில் டிரெய்லரில் நடிகர் விஜய்யை ஒத்த ஒரு உருவத்தை ஸ்பாட் செய்திருக்கிறார்கள் நமது ரசிகர்கள். அவர்கள் நினைப்பதில் தவறு இருக்க வாய்ப்புகள் குறைவுதான்.
இப்போதெல்லாம் இந்தி , தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிப் படங்களிலும் ரசிகர்களை குஷிப்படுத்த நடிகர்கள் இந்த மாதிரியான சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார்கள். எதற்கும் தயாராக இருங்கள் மக்களே!
Is this #Thalapathy @actorvijay?#Leo | #Jawan | #JawanPrevue pic.twitter.com/AVFji2zVOs
— ᴊᴜsᴛ sʀᴇᴇʀᴀᴍ (@sreeramhere_) July 10, 2023
அட்லீ - ஷாரூக்கான்:
‘பாலிவுட் பாட்ஷா’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாரூக்கான் கடந்த சில ஆண்டுகளாக எந்த ஹிட்டும் கொடுக்காமல் அவதிப்பட்டு வந்தார். இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி அவரது நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் ஒட்டுமொத்த இந்தி திரையுலகுக்குமே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பதான் வெற்றியைத் தொடர்ந்து ஷாரூக்கான் ரசிகர்களும், பாலிவுட் ரசிகர்களும் அட்லீ இயக்கத்தில் ஷாரூக் நடிக்கும் ஜவான் படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இன்று ஜவான் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது. மிரட்டலான ஆக்ஷன் திரைப்படமாக ஜவான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.