ஒரே பாட்டில் ஆல் அவுட்..ரஹ்மான் இசையில் சின்மயி பாடிய தக் லைஃப் பாடல்..புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
Chinmayi : தக் லைஃப் படத்தில் ரஹ்மான் இசையில் சின்மயி பாடியுள்ள 'முத்த மழை பாடல் ரசிகர்களிடம் பாராட்டுக்களை அள்ளி வருகிறது

பாராட்டுக்களை அள்ளும் தக் லைஃப் ஆல்பம்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் , சிம்பு , த்ரிஷா , அபிராமி , அசோக் செல்வன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ள படம் தக் லைஃப். வரும் ஜூன் 5 ஆம் 6 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ரஹ்மான் இசையில் 8 பாடல்கள் தக் லைஃப் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த 8 பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக முத்த மழை மற்றும் அஞ்சு வண்ண பூவே ஆகிய இரு பாடல்கள். இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை இந்தி மற்றும் தெலுங்கில் சின்மயி பாடியிருக்கிறார். தமிழில் தீ இந்த பாடலை பாடியுள்ளார்.
சின்மயி பாடிய 'முத்த மழை'
இசை வெளியீட்டு விழாவில் சின்மயி இந்த பாடலை பாடினார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ரஹ்மான் இசையையும் சின்மயி இதை பாடியிருக்கும் விதத்தையும் பாராட்டி வருகிறார். தீ பாடியதை விட பெரும்பாலான ரசிகர்கள் சின்மயி குரலை அதிகம் விரும்புகிறார்கள். 'இப்படிபட்ட குரலையா பாடவிடாமல் தடை விதித்திருக்கிறார்கள்' என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ரசிகர்களின் வரவேற்பைத் தொடர்ந்து தற்போது ஆடியோ லாஞ்சில் சின்மயி பாடிய காணொளி யூடியூபில் வெளியாகியுள்ளது.
My performance of Mutha Mazhai is now out on Sa Re Ga Ma’s official Youtube channel https://t.co/bzlnKM7rka
— Chinmayi Sripaada (@Chinmayi) May 28, 2025
🙏🙏




















