மேலும் அறிய

Ayalaan Update: ”இந்த தீபாவளிக்கு நாங்க வர்றோம்” - ரிலீஸ் அப்டேட்டை விட்ட அயலான் படக்குழு: பதற்றத்தில் ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘நேற்று இன்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “அயலான்”. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். மேலும் சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன்  உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான காட்சிகள் அதிகளவில் இடம் பெற உள்ளதால் தரமான கிராஃபிக்ஸ் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அயலான் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒருபக்கம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், மறுபக்கம் பதற்றமடைந்துள்ளனர்.

காரணம் கடந்த தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் முதல் தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் படம் வெளியாகியது.பெரும் எதிர்பார்ப்பில் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு இப்படம் பேரிடியாக அமைந்தது. படுதோல்வியடைந்த அப்படத்தால் அடுத்தடுத்த படங்களை மிக கவனமுடன் சிவகார்த்திகேயன்  தேர்வு செய்து வருகிறார். 

தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: 

முன்னதாக நேற்றைய தினம் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டது. அதில், “

அயலான் திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளைத் தாண்டி, 'அயலான் 'அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அயலான் ' திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின்  CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கலுடன் பணி புரிந்துள்ளோம்.  அயலான்,  ஒரு பான்-இந்தியன் திரைப்படம் என்பதால்  அதிக எண்ணிக்கையிலான CGI  காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது.

திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாப்பாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது. மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பரிய CG பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம். 

உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்” என தெரிவித்திருந்தது” என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தலைவர் 173 பட இயக்குநர் மாற்றம்.. சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான்
தலைவர் 173 பட இயக்குநர் மாற்றம்.. சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான்
13 ஆண்டுகள் காதல்..இரண்டாவது மகள் திருமண தேதி அறிவித்த அர்ஜூன்!
13 ஆண்டுகள் காதல்..இரண்டாவது மகள் திருமண தேதி அறிவித்த அர்ஜூன்!
25 வயது பெண்ணாக காட்டிக்கொள்வது எண்ணமில்லை..நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்
25 வயது பெண்ணாக காட்டிக்கொள்வது எண்ணமில்லை..நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்
Actor Jayaram: கிளைமேக்ஸ் காட்சியில் எஸ்கேப்.. ஜெயராம் சொன்ன பதிலால் டென்ஷனான இயக்குநர்!
Actor Jayaram: கிளைமேக்ஸ் காட்சியில் எஸ்கேப்.. ஜெயராம் சொன்ன பதிலால் டென்ஷனான இயக்குநர்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
“Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Embed widget