மேலும் அறிய

Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?

திமுகவின் மிக முக்கிய பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த பொதுச்செயலாளர் ரேஸில் 2 சீனியர்கள் இருக்கும் நிலையில், இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்றும் ஆலோசனை நடந்து வருவதாக சொல்கின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 2.o திராவிட மாடல் ஆட்சி அமையும் என திமுகவினர் உறுதியாக நம்பிய நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கான காரணத்தை கண்டறிய திமுக தலைமை குழு அமைத்துள்ளது. இந்த குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தோல்விக்கான காரணத்தை கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்து வருகிறது. 

இந்தநிலையில் திமுகவின் முக்கிய பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே இந்த மாற்றம் நடக்கவிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அந்த முடிவு தள்ளிபோடப்பட்டது. திமுக பொதுச்செயலாளராக இருந்த அன்பழகனின் மறைவிற்கு பிறகு திமுகவின் பொதுச்செயலாளராக கடந்த 2020ஆம் ஆண்டு முதல் துரைமுருகன் செயல்பட்டு வருகிறார். 

2021 தேர்தலில் வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்ற துரைமுருகன் உடல் நிலை பாதிப்பு காரணமாக இந்த முறை தேர்தலில் போட்டியிட மாட்டார் என தகவல் வெளியான நிலையில், மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் அமைச்சரவையில் இடம் பிடித்து விடலாம் என தேர்தல் களத்தில் இறங்கினார். ஆனால் இந்த முறை 3வது இடத்திற்கு துரைமுருகன் தள்ளப்பட்டு தோல்வி அடைந்தார். தற்போது 87 வயதாகும் துரைமுருகன் உடல்நிலை பாதிப்பு காரணமாக திமுக நிகழ்வுகளில் பெரிய அளவில் பங்கேற்காமல் உள்ளார். மேலும் இளைய தலைமுறை தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடும் வகையில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக இருப்பதாக சொல்கின்றனர். அந்த வகையில் விரைவில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் தனது முடிவை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்.? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக பொதுச்செயலாளர் ரேஸில் தற்போது பொருளாளார் பதவியில் உள்ள டி.ஆர். பாலு பெயர் முதல் இடத்தில் உள்ளது. அடுத்தாக திமுக முதன்மை செயலாளராக இருப்பவர் கே.என். நேரு இவரது பெயரும் உள்ளது. ஆனால் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் திமுகவின் இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் சொல்கின்றனர்.

செய்திகள் வீடியோக்கள்

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக செல்லும் அமிர்த் பாரத் விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு
திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக செல்லும் அமிர்த் பாரத் விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Embed widget