மேலும் அறிய

Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!

Best Cars Under 8 Lakh: எட்டு லட்சம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த மிடில் கிளாஸ் ஃபேமிலி கார்களின் விவரங்களை இங்கே விரிவாகக் காண்போம்.

8 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கும் பெஸ்ட் ஃபேமிலி கார்கள் பற்றிய விவரங்களை கீழே காணலாம். நடுத்தர வர்க்கத்தினருக்கான சூப்பர் சாய்ஸாக இது இருக்கும் என்று நம்புகிறோம்.

இந்தியாவில் நடுத்தரக் குடும்பங்களின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று, வீடு கட்டுவது. அடுத்தது சொந்தமாக ஒரு கார் வாங்குவது. பணக்காரர்களைப் போல அல்லாமல், மிடில் கிளாஸ் மக்கள், பட்ஜெட், பாதுகாப்பு, மைலேஜ் மற்றும் பராமரிப்புச் செலவு ஆகியவற்றை அலசி ஆராய்ந்த பின்னரே காரைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த வகையில், எட்டு லட்சம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த ஃபேமிலி கார்களின் விவரங்களை இங்கே விரிவாகக் காண்போம்.

டாடா பஞ்ச்

முதலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பஞ்ச் காரைப் பார்க்கலாம். இது மைக்ரோ எஸ்யூவி பிரிவில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார். குளோபல் என்கேப் சோதனையில் ஐந்து நட்சத்திர ரேட்டிங் பெற்றுள்ளதால், பாதுகாப்பிற்கு இது முழு உத்தரவாதம் அளிக்கிறது. இதன் விலை ரூ.6 லட்சத்தில் தொடங்கி 8 லட்சத்திற்குள் பல வேரியண்ட்களில் மிக எளிதாகக் கிடைக்கிறது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், சிறந்த இடவசதி இதன் பலம்.

சுசுகி ஸ்விஃப்ட்

அடுத்தபடியாக, பல ஆண்டுகளாக மக்களின் பேராதரவைப் பெற்ற மாருதி சுசுகி ஸ்விஃப்ட். சமீபத்தில் புதிய மாடலாக வெளிவந்துள்ள இது, லிட்டருக்கு இருபத்தைந்து கிலோமீட்டர் வரை மைலேஜ் தருவது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் நிம்மதியாகும். குறைந்த பராமரிப்புச் செலவு, சிறந்த மறுவிற்பனை மதிப்பு இதன் சிறப்பம்சம்.

மாருதி பலேனோ

அதேபோல, மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோவின் அடிப்படை மாடல்களும் எட்டு லட்சத்திற்குள் எளிதாகக் கிடைக்கின்றன. இதில் குடும்பத்துடன் சொகுசாகப் பயணிக்கத் தேவையான இடவசதியும் ஏராளமான தொழில்நுட்பங்களும் உள்ளன.

கிராண்ட் ஐ10 நியோஸ்

ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் எட்டு லட்சத்திற்குள் கிடைக்கும் மற்றொரு தரமான கார். இதில் ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுவதால் பாதுகாப்பிற்குப் பஞ்சமில்லை. பிரீமியம் இன்டீரியர் வடிவமைப்பு, மென்மையான ஓட்டுநர் அனுபவம், சிறந்த ஏசி வசதி ஆகியவை நகர்ப்புறப் பயன்பாட்டிற்கு இதைச் சிறந்த தேர்வாக நிச்சயமாக மாற்றுகின்றன.

நிஸான் மேக்னைட்

எஸ்யூவி போன்ற பிரம்மாண்ட தோற்றம் வேண்டும் ஆனால் பட்ஜெட் குறைவு என நினைப்பவர்களுக்கு நிஸான் மேக்னைட் மிகச்சிறந்த வாய்ப்பாகும்.

ரெனால்ட் கைகர்

ரெனால்ட் கைகர் காரும் இதேபோல சிறப்பான இடவசதி, அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் போதுமான மைலேஜ் ஆகியவற்றைத் தருகிறது. இவற்றின் பேஸ் வேரியண்ட்கள் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றன.

சொந்த கார் வாங்குவது என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நீண்ட கால முதலீடு. உங்களுடைய முதல் முன்னுரிமை பாதுகாப்பா, அதிக மைலேஜா அல்லது இடவசதியா என்பதைத் தெளிவாகத் தீர்மானித்து அதற்கேற்ப காரைத் தேர்ந்தெடுங்கள்.

ஆல் தி பெஸ்ட்!

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget