மேலும் அறிய

Actor Jayaram: கிளைமேக்ஸ் காட்சியில் எஸ்கேப்.. ஜெயராம் சொன்ன பதிலால் டென்ஷனான இயக்குநர்!

ட்வென்டி:20  படத்தில் என்னுடைய பகுதி எல்லாம் ஷூட் செய்து முடித்து விட்டார்கள். கடைசியில் ஹீரோவாக நடித்த நாங்கள் 5 பேர் நடந்து வருவது போல ஒரு காட்சி மட்டும் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் நான் எஸ்கேப்பாகி விட்டேன் என ஜெயராம் கூறியுள்ளார்.

மலையாளத்தில் வெளியான ட்வென்டி:20  படத்தின் ஷூட்டிங்கின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை நடிகர் ஜெயராம் பகிர்ந்துள்ளார். 

5 ஹீரோக்கள் நடித்த ட்வென்டி:20  படம் 

கடந்த 2008ம் ஆண்டு மலையாள சினிமாவில் ட்வென்டி:20  படம் வெளுயானது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இப்படத்தில் இப்படத்தில் மோகன்லால் , மம்மூட்டி , சுரேஷ் கோபி, ஜெயராம், திலீப் ஆகிய 5 பேர் நடித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் மனோஜ் கே. ஜெயன், இந்திரஜித் சுகுமாரன்,பாவனா,  சிந்து மேனன், கோபிகா, காவ்யா மாதவன், முகேஷ், கலாபவன் மணி,  சுராஜ் வெஞ்சாரமூட் என ஒட்டுமொத்த மலையாள திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். 

ஜோஷி இப்படத்தை இயக்கினார். மலையாள சினிமா கலைஞர்களுக்கு நிதி திரட்டும் வண்ணம் இப்படம் கேரளா சினிமா சங்கமான அம்மாவில் இருக்கும் திரைக்கலைஞர்களால் சம்பளம் இல்லாமல் நிதி திரட்ட நடித்தனர். இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம் ஒன்றை ராம்குமார் சிவாஜியுடனான நேர்காணலில் ஜெயராம் பகிர்ந்திருந்தார். 

ஷூட்டிங்கை விட தீபாவளி முக்கியம்

ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஜெயராமிடம் அவர் நடித்த ட்வென்டி:20  படத்தின் போஸ்டரை காண்பித்து அதன் நினைவுகள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்த படத்தை இப்போதும் ஒருமுறை நீங்கள் நன்றாக பாருங்கள். கிளைமேக்ஸ் காட்சியில் நான் மட்டும் இருக்க மாட்டேன். ட்வென்டி:20  படத்தில் என்னுடைய பகுதி எல்லாம் ஷூட் செய்து முடித்து விட்டார்கள். கடைசியில் ஹீரோவாக நடித்த நாங்கள் 5 பேர் நடந்து வருவது போல ஒரு காட்சி மட்டும் எடுக்க வேண்டியிருந்தது. கிளைமேக்ஸ் ஃபைட் எல்லாம் எடுத்து முடித்த பிறகு தான் இதை எடுக்க முடியும். அதனால் இன்னும் 2 நாட்கள் ஷூட்டிங் இருக்க வேண்டும் என படத்தின் இயக்குநர் ஜோஷி சொன்னார். 

Also Read: உத்திராட்சத்தை உருட்டுமாலை சொன்ன வைரமுத்து.. வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி!

அந்த நேரம் தீபாவளி பண்டிகை வந்தது. அதற்காக நான் சென்னையில் இருக்கும் என்  வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். நான் ஜோஷியிடம், தீபாவளிக்கு ஊருக்கு போக வேண்டும் என சொன்னேன். அதற்கு அவர், “உனக்கு தீபாவளி பெருசா.. இல்ல.. கடைசியில் நீங்கள் 5 பேரும் நடந்து வருவது பெருசா?” என கேள்விக் கேட்டார். நான் கொஞ்சம் கூட யோசிக்காமல், சார் எனக்கு தீபாவளி தான் முக்கியம் என சொல்ல அப்படியென்றால் போ என அனுப்பி விட்டார் என்று ஜெயராம் நகைச்சுவையான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 

ஜெயராமின் அடுத்த படம்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், யோகிபாபு, சாண்டி, அனந்திகா உள்ளிட்டோர் நடிப்பில் “பரிமளா அண்ட் கோ” படம் உருவாகியுள்ளது. இப்படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
Embed widget