
‘என்னால அழுகைய அடக்கவே முடியலடா’ - இயக்குநர் நெல்சன் குறித்து டிடி வெளியிட்ட வீடியோ!
169 ஆவது படத்தை முடிப்பதற்குள் ரஜினிகாந்த் 170 படத்தை தேர்வு செய்வதற்கான வேலைகளை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம்.

‘என்னால அழுகைய அடக்கவே முடியலடா’ என்று கூறி பிரபல தொகுப்பாளினி டிடி வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படம் தொடர்பான தகவல்கள் தினம் தினம் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. ரஜினி - நெல்சன் - அனிருத் கூட்டணியில் அமையும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வர இருப்பதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. அதனை அடுத்து, ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ்(Sun Pictures) தயாரிக்க இருப்பது உறுதியானது. நெல்சன் திலீப்குமார்(Nelson Dilipkumar) இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் இப்படம் உருவாக உள்ளது என்று உறுதியானது. இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அறிவிப்பு தொடர்பாக வெளியான வீடியோவில் ரஜினி ஸ்டைலாக பார்த்த பலரும் பலவிதமான கமெண்ட்களை செய்தனர்.
தற்போது, இந்த வீடியோவை பார்த்த பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்ய தர்ஷினி தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியான பதிவை ஒன்றையிட்டுள்ளார். அவரது பதிவில், ‘என்னால அழுகைய அடக்கவே முடியலடா நெல்சா. தலைவர் சிங்கம் மாதிரி இருக்காரு டா... என் தலைவா ரஜினிகாந்த் சாருக்கு நன்றி... அனிருத் பிஜிஎம் வெறி...போங்கப்பா ரொம்ப ஹேப்பி..” என்று பதிவிட்டுள்ளார்.
நெல்சனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக, விஜய் டிவி பல ஷோக்களை இயக்கியுள்ளார். அப்போது, திவ்ய தர்ஷினியும், நெல்சனும் நண்பர்களாக இருந்துள்ளனர். தற்போது, நெல்சன் இந்த நிலைமைக்கு வந்ததை கண்டு பெருமையுடன் அவரது தனது மகிழ்ச்சியை தெரியப்படுத்தியுள்ளார்.
Enala azhugaiya adakave mudiyalada nelsa… @Nelsondilpkumar
— DD Neelakandan (@DhivyaDharshini) February 10, 2022
THALAIVAR SINGAM MADRI IRUKAAARU DAAAAA.
EN THALAIVAAAAAAAAA @rajinikanth sir THANK YOU @sunpictures @anirudhofficial veriiiiii bgm
Pongapaaaaa Romba happy ❤️❤️❤️❤️ pic.twitter.com/cKkkDJOHYr
கொரோனா சூழ்நிலைகளை பொறுத்து, 5 முதல் 6 மாதங்களில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவரது 170 வது படத்திற்காக இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 169 ஆவது படத்தை முடிப்பதற்குள் ரஜினிகாந்த் 170 படத்தை தேர்வு செய்வதற்கான வேலைகளை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

