சாதுர்யம் பேசாதடி.... பத்மினி சலங்கைக்கு பதில் சொல்லடி! ஆட வைத்த ‛டாப்’ 5 பாடல்கள்!
மறைந்த நாட்டிய பேரொளி பத்மினியின் 89வது பிறந்தநாள் இன்று. அவரை நினைவு கூறும் விதமாக அவர் நடித்த படங்களிலிருந்து அவர் திறமையை நிரூபித்த டாப் 5 பாடல்கள் இதோ!
1.மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...
‛‛எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னையல்லால்
வேறு யார் அறிவார்
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னையல்லால்
வேறு யார் அறிவார்
பாவையின் பதம் காண நாணமா
பாவையின் பதம் காண நாணமா
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
மாலவா வேலவா மாயவா
ஷண்முகா...’’
பத்மினி பாடல் என்றால், இது தான் பிள்ளையார் சுழியாக இருக்கும். இந்த பாடலுக்கு அடுத்து தான் மற்ற பாடல்கள் வரும். கண்ணதாசனின் அற்புதமான வரிகளில் கே.வி.மகாதேவனின் இசையில், தில்லானா மோகனாம்பாள்!
2.கண்ணும் கண்ணும் கலந்தே...
‛‛சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி
சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி
ஆடும் மயில் எந்தன் முன்னே
என்ன ஆணவத்தில் வந்தாயோடி
பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு
படமெடுத்து ஆடேதடி
நீ படமெடுத்து ஆடேதடி
இன்னொருத்தி நிகராகுமோ
எனக்கின்னொருத்தி நிகராகுமோ
இடி இடித்தால் மழையாகுமோ பேதை பெண்ணே
இன்னொருத்தி நிகராகுமோ!
பாரதப் போர் பார்த்த நமக்க பரதப் போரை கண் முன் கொண்டு வரும் நடனப்போட்டி இந்த பாடல். வஞ்சிக்கோட்டை வாலிபனில் வாழ்ந்திருப்பார் பத்மினி.
3.அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்...
‛‛உடல்நான் உரம் நீ -ம்ஹூம்..
உடல் நான் அதில் உளம் நீ
என உறவு கொண்டோம் நேர்மையால்
கடல்நிலவாய் காட்சியிலே கலந்து நின்றோம்
ப்ரேமையால்
குணம் நிறை மாற்றறியா பொன்னே
சொல் ஏன் ஜாலம்
போனால் வராது இது போல
காலம் இனி..’’
தெய்வப்பிறவி படத்தில் நடிகர் திலகத்துடன் காதல் கசியும் பாடல். ஆர்.சுதர்சன் இசையில், உடுமலை நாராயண கவி எழுதிய பாடல்.
4.எம்.ஜி.ஆர்., ஆடிய ஒரே பரதம்!
இது மன்னாதி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆர்., பத்மினி இருவரும் சேர்ந்து ஆடிய பாடல். வரிகள் இல்லாத இசை மட்டுமே இருக்கும். பத்மினி போன்ற நடனபேரொளியோடு எம்ஜிஆர் ஆடியிருப்பார். அதுவும் பரதம். இந்த அளவிற்கு எம்.ஜி.ஆர்., வேறு எந்த பாடலிலும் ஆடியதில்லை.
5.இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே...
‛‛துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
இன்பதீபம் உன் ரூபம் தான் மாமயிலே
வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே - ஒரு
எல்லையில்லா இன்பம் அலை மோதுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
அன்பில் ஊறும் மெய்க்காதல் போலே பாரிலே
இன்பம் ஏதும் வேறில்லையே ஆருயிரே
கன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ? - என்னைக்
கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ?
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே...’’
அழகிய உரையாடல் போலச் செல்லும் இந்த பாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜி.ராமநாதன் இசையில் உருவான இனிமையான பாடல். கண்ணுக்கு குளிர்ச்சியான ஈஸ்ட்மென்ட் கலரில் பார்க்கவும், கேட்கவும் இனிமை ரகம்!
மேலும் படிக்க: ‛மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்...’ மறக்க முடியாத மோகனாம்பாளின் பிறந்த தினமும்!