நாய்க்கு கேரவன், 5 ஸ்டார ஹோட்டலில் ஏசி ரூம் கேட்ட நடிகை; தயாரிப்பாளர் ஓபன் டாக்!
தன்னுடைய நாய்க்கு 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம், கேரவன் கேட்ட நடிகையை பற்றி பிரபலம் ஒருவர் ஓப்பனாக பேசியிருக்கிறார்.

சினிமாவில் கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நடிகர், நடிகைகளின் வசதிக்கு அவர்கள் சொல்வதை செய்து கொடுப்பார்கள். ஆனால், அதையே ஓவர் அட்வாண்டேஜாக எடுத்துக் கொள்ளும் சில நடிகர், நடிகைகள் தவறாக பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி தான் ஒரு நடிகையும் செய்திருக்கிறார். அது என்ன என்று பார்க்கலாம்.
இது குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருப்பதாவது: நடிகைகள் கொஞ்சம் ஓவராகத்தான் பண்ணுவார்கள். அதனை சாப்பாட்டிலிருந்து தான் ஆரம்பிப்பார்கள். அது வேணும், அது வேணும், மீன், கோழி, ஆட்டுக்கறி என்று வெரைட்டி வெரைட்டியாக கேட்பார்கள். இதுல மீன்ல மட்டும் கிட்டத்தட்ட 5 முதல் 10 ஐட்டம் வரை இருக்கும். அப்படி அவர்கள் கேட்பதை கொடுத்தாலும் எல்லாவற்றையும் எப்படி முழுவதுமாக சாப்பிடுவார்கள்? அப்படியே சாப்பிட்டாலும் எப்படி அவர்களால் சீன்ல நடிக்க முடியும், அப்படியே நடிச்சாலும் அந்த சீன் தான் கரெக்டா வருமா?
மேலும் நடிகைகளுக்கு இருக்கும் டச்சப் பாய்க்கும் அவர்கள் சாப்பிடும் சாப்பாடு தான் கொடுப்பார்கள். இதில் ஒரு சில நடிகைகள் வித்தியாசமாக இருப்பார்கள். அவர்கள் தங்களது வீட்டிலிருக்கும் அப்பா, அம்மா என்று எல்லோருக்குமே சாப்பாடு ஆர்டர் செய்வார்கள். இதையும் தாண்டி இப்போது நடிகைகள் பெரும்பாலும் வளர்ப்பு பிராணிகள் என்று நாய் வளர்க்கிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும் போதே கையோடு செல்ல பிராணிகளையும் கூட்டிட்டு வந்துவிடுகிறார்கள். நடிகைகள் எப்படி செல்கிறார்களோ அப்படியே நாய்களுக்கும் என்று அவர்கள் செய்யும் அலப்பறைகளை தாங்கிக் கொள்ளவே முடியாது.
இதில் பேம்ஸ் நடிகை ஒருவர் இருக்கிறார். அவர், தான் எங்கு சென்றாலும் தன்னுடைய நாயையும் அழைத்துக் கொண்டு தான் செல்வார். அப்படி தான் பெங்களூருவில் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்ள அந்த நடிகை தன்னுடைய நாயையும் கூட்டிக் கொண்டு சென்றிருந்தார். ஆனால், அந்த நடிகைக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்ட போது, அந்த நாய்க்கு மட்டும் சாதாரண ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர்.
இது எப்படியோ அந்த நடிகையோட காதுக்கு போக, எப்படி நீங்கள் சாதாரண ஹோட்டலில் ரூம் போடலாம்? ஏன் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட முடியாதா? என்றெல்லாம் கேள்வி கேட்டு தயாரிப்பாளரை லெப்டு ரைட்டு வாங்கியிருக்கிறார். உடனே அந்த தயாரிப்பாளர் நாய்க்கு 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் புக் செய்ய, அது ஏசி இல்லாத ரூமாக போயிருச்சு. அதுக்கும் அந்த நடிகை காச்சு மூச்சுன்னு கத்த கடைசியில் நாய்க்கும் ஏசி ரூம் போட்டிருக்கிறார்.
ஷூட்டிங்கிற்கு பிறகு பார்த்த போது நடிகைக்கும் நாய்க்கும் தலா ரூ.25,000 என்று பில் வந்திருக்கிறது. நாய்க்கும், நடிகைக்கும் சேர்த்து ரூ.50,000 பில். சில நாட்கள் கழித்து தான் அந்த தயாரிப்பாளரை நான் பார்த்தேன். அவருடைய நிலைமை மோசமாக இருந்தது. இன்னொரு நடிகை தன்னுடைய நாய்க்கு கேரவன் கேட்டு அடம்பிடித்த சம்பவமும் நடந்திருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ..?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

