Fahadh Faasil : ஒரு நாளுக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா? புஷ்பா 2 படத்தில் ஃபகத் பாசில் காட்டும் கெத்து...
Fahadh Fassil : நடிகர் ஃபகத் பாசில் புஷ்பா 2 படத்திற்காக சம்பளமாக எவ்வளவு பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி ஸ்டார் நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் பிளாக் பஸ்டர் திரைப்படம் 'புஷ்பா : தி ரைஸ்'. ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்று உலகளவில் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து வசூல் வேட்டை செய்தது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது. அதிலும் சமந்தா ஐட்டம் நம்பருக்கு நடனமாடிய ஊ சொல்றியா மாமா...பாடல் இன்றளவும் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.
முதல் பாகம் படு சூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து தற்போது அதன் இரண்டாம் பாகமான 'புஷ்பா : தி ரூல்' படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது. நீண்ட காலமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக இருக்கும் இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
முதல் படமே 1000 கோடி வசூல் செய்ததால் இரண்டாம் பாகம் அதையும் கடந்து வசூலில் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் வில்லனாக நடித்த ஃபகத் பாசில் தான் இரண்டாவது பார்ட்டிலும் வில்லனாக நடித்துள்ளார். அவருக்கு முதல் பாகத்தை காட்டிலும் அதிகமான காட்சிகள் இந்த பாகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் மூலம் பான் இந்திய நடிகராக உயர்ந்துள்ள ஃபகத் பாசிலிடம் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் அதிர்ச்சியை கொடுத்ததுடன் பரபரப்பை ஏற்படுத்தியது.
புஷ்பா படத்தின் கதாபாத்திரத்தில் எந்த குறையும் இல்லை. அந்த படத்தில் நான் நடிக்க சுகுமார் மீது இருந்த அன்பு தான் காரணம். மலையாள சினிமாவில் தான் என்னுடைய முழு கவனமும் உள்ளது. ஆனால் அதற்காக அப்படம் எனக்கு பான் இந்தியன் நடிகர் என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளது என்று எல்லாம் சொல்ல முடியாது என ஃபகத் பாசில் அளித்த பதில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அந்த வகையில் சமீபத்தில் தான் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஃபகத் பாசில் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு பல நாட்களாக நடைபெற்று வந்ததால் தன்னுடைய சம்பளத்தை நாள் கணக்கு முறைக்கு மாற்றிக் கொண்டாராம் பகத் பாசில். அந்த வகையில் ஒரு நாளைக்கு 12 லட்சம் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.