ABP Nadu Exclusive: ‛நானும் திமுக குடும்பம் தான்...’ திண்டுக்கல் பொண்ணு ‛சார்பட்டா’ மாரியம்மா பெருமிதம்!
என் அப்பா விஜயன், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 40 வருடமா திமுகவில் கட்சிப் பணியில் உள்ளார். படத்தில் இயற்கையாகவே திமுக தொடர்பான காட்சிகள் வந்துவிட்டது.
சார்பட்டா திரைப்படத்தில் கதா நாயகியாக தனது நடிப்பின் மூலம் பிரபலமாகி வரும் கதாநாயகி துஷாராவின் சொந்த ஊர் பின்னணி தெரியுமா...
சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமான கதாநாயகி துஷாரா திண்டுக்கல் மாவட்டம் கன்னியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் .சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்துள்ளார். ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி இதோ...
‛‛திண்டுக்கல் மாவட்டத்தில் தான் ஆரம்ப பள்ளி முடித்தேன். கோயம்புத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் மேல் நிலை பள்ளியை முடித்தேன். அப்புறம் சென்னையில் ஃபேஷன் டெக்னாலஜி முடித்து விட்டு, சினிமா மீது ஆசை வந்தது. அதற்கான முயற்சியை எடுத்த போது, சிறு சிறு வாய்ப்புகள் வந்தது. ரஞ்சித் சார் மூலமா சார்பட்டா வாய்ப்பு கிடச்சது. அது எனக்கு மூன்றாவது படம்.
துர்கா நாகேஸ்வரி, நாகலட்சுமி, புவனேஸ்வரன் என மூன்று பேர் என்னுடன் பிறந்தவர்கள். என் அப்பா விஜயன், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 40 வருடமா திமுகவில் கட்சிப் பணியில் உள்ளார். படத்தில் இயற்கையாகவே திமுக தொடர்பான காட்சிகள் வந்துவிட்டது. எனது தந்தையும் திமுகவை சேர்ந்தவர் என்பதால் திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் சர்பட்டா பரம்பரை படத்தை கூடுதலா கொண்டாடுறாங்க. படம் ஹிட் ஆனதுல எனக்கு ரொம்ப சந்தோசம்,’ என்றார்.
1970களில் மத்தியில் வடசென்னை இருந்த பாக்சிங் பரம்பரையும் மற்றும் எமர்ஜென்சி அவர்களது வாழ்க்கை ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விவரிக்கும் திரைப்படமாக உள்ளது சார்பட்டா பரம்பரை என படத்தின் மீது விமர்சனம் எழுந்துள்ளது. அப்போதைய அரசியல் நிகழ்வுகளையும் படத்தில் காட்டியுள்ளார் இயக்குனர் ரஞ்சித் திமுக, அதிமுக, காங்கிரஸ் ,இந்திய குடியரசு கட்சி போன்ற கட்சிகளில் 1975 கால அரசியலை வெளிப்படையாக பேசுகிற மாதிரியிலும் எமர்ஜென்சி காலகட்டத்தில் திமுகவினர் கைது செய்யப்பட்டது என சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் . இதனால் திமுக கட்சியினர் இந்த படத்தை தற்போது கொண்டாடி வருகின்றனர் . சார்பட்டா பரம்பரை வெற்றியை தொடர்ந்து தற்போது வசந்த பாலன் படத்தில் நடித்த படம் ஒன்று வெளியாக உள்ளதாகவும் தற்போது மீண்டும் இயக்குனர் ரஞ்சித் தயாரிக்கும் படித்திலும் நடித்து வருவதாகவும் கூறினார்.
கூட்டம் குவியும் மிட்டாய்க்கடை - இது தேனி Special | Theni | 80s kid | 90s kid | Mittai | Chocolate