HBD Kushboo: ‛றெக்கை கட்டி பறந்தவ இவ தான்...’ எந்நாளும் கொண்டாடப்படும் குஷ்புவின் பிறந்தநாள் இன்று!
தமிழ் சினிமாவின் கனவு கன்னியாகவும் இதுவரையில் எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத ஒரு உயரிய அந்தஸ்தை கொடுத்து சிம்மாசனத்தில் அமர்த்திவைக்கப்பட்ட ஒரே நடிகை குஷ்புவின் 52 வது பிறந்தநாள் இன்று
தமிழ் சினிமாவின் கனவு கன்னியாகவும் இதுவரையில் எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத ஒரு உயரிய அந்தஸ்தை கொடுத்து சிம்மாசனத்தில் அமர்த்திவைக்கப்பட்ட ஒரே நடிகை குஷ்பு. இன்று 52 வது பிறந்தநாள் கொண்டாடும் குஷ்பூவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்றும் அதே குஷ்பு தான் :
90'ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த குஷ்பு அன்று போல் இன்றும் அதே இளமையோடும், சுறுசுறுப்போடும் இருப்பது திரை வட்டாரத்திலேயே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் குறையவில்லை இன்னும் அதிகமா தான் ஆகுது என்ற நீலாம்பரியின் வசனத்திற்கு கனகச்சிதமாக பொருந்த கூடியவர் நடிகை குஷ்பு. அன்று எவ்வளவு பிஸியாக இருந்தரரோ அதே போல் இன்றும் சின்னத்திரை, வெள்ளித்திரை, அரசியல், சோசியல் மீடியா என அனைத்திலும் கலக்கி வருகிறார். இரண்டு டீனேஜ் மகள்களுக்கு தாயான பிறகும் இன்றும் ஹீரோயின் ரேஞ்சில் இருந்து சற்றும் குறையாத அழகு.
Wishing the Evergreen Queen #Kushboo a Very Happy Birthday❤#HappyBirthdayKushboo #HBDKushboo
— Kʀɪsʜ 🦋 (@Krish_twtz) September 29, 2022
Always a dream girl @khushsundar #KhusbhuSundar forever 👑 pic.twitter.com/na5siAtCne
ஆல்ரவுண்டர் குஷ்பு :
தமிழ் சினிமாவின் பொறாமைப்படும் கியூட் ஜோடிகளில் குஷ்பூ - சுந்தர்.சி ஜோடி தான் முதலிடம். குடும்பம், திரைவாழ்க்கை, அரசியல் என அனைத்தையும் ஒரே ஆளாக சிறப்பாக கையாளும் இந்த கெட்டிக்காரி மாமியாரின் ஃபேவரட் மருமகள். இந்த சாதனை பெண்மணிக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், நண்பர்கள், தொண்டர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்த வண்ணமாக உள்ளனர்.
#CoffeeWithKadhal trailer & audio launch the hosts @khushsundar & #SundarC pic.twitter.com/BihGYO6zWV
— Sreedhar Pillai (@sri50) September 26, 2022
குஷ்பு என்றும் பிஸி :
மும்பையில் பிறந்த குஷ்பு குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் நுழைந்தவர். வளர்ந்த பிறகு ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர். பல முன்னணி நடிகர்களும் இவருடன் நடிக்க விருப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஹீரோவுடன் குஷ்பூ நடித்தாலும் அந்த ஜோடி மாஸ்ஸாக தான் இருக்கும். இன்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது உலக சுற்றுலா செல்கிறார். இப்படி மேடம் என்றுமே பிஸி தான். இன்று போல் என்று அதே சுறுசுறுப்புடனும், ஆரோக்கியத்துடனும், அழகோடும் சந்தோஷமாக நீடுடி வாழ வாழ்த்துக்கள். ஹாப்பி பர்த்டே குஷ்பு மேம் !!!
குஷ்பு தற்போது இளைய தளபதி விஜய் நடிக்கும் "வாரிசு" திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குஷ்பு ஜோடியாக நடித்த பிரபு மற்றும் சரத்குமார் இருவரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். மீண்டும் சரத்குமார், குஷ்பு மற்றும் பிரபு மூவரையும் திரையில் ஒரே நேரத்தில் பார்க்கபோவதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.