Ethirneechal Promo: குணசேகரன் மீண்டும் டெரரா வரப்போறாரா? வெளியான இன்றைய ப்ரமோ...
இன்றைய ப்ரோமோவில் பட்டம்மாள், குணசேகரன் மீண்டும் ரொம்ப ஆபத்தான ஆளா வரப்போறான் என்கிறார்.
நடிகர் மாரிமுத்துவின் மறைவிற்கு பின் எதிர்நீச்சல் சீரியல் கதைக்களம் எதை நோக்கி பயணிக்கின்றது என்றே தெரியாமல் இருந்தது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் கடிதம் எழுதி வைத்து விட்டு, தன் சொத்துக்களை தம்பிகள் மற்றும் அம்மா பெயரில் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். இதனால் குடும்பத்தினர் குழப்பத்தில் இருக்கின்றனர்.
குணசேகரின் அண்ணன்:
மேலும் விசாலாட்சி குணசேகரனின் ரேகைக்கு ஓலை பார்க்கிறார். அதில் குணசேகரன் இரண்டாவது மகன் என்று ஜோதிடர் கூறுகிறார். அவர் இவ்வாறு கூறியதன் மூலம், குணசேகரன் கதாப்பாத்திரத்தை சீரியல் குழு முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தெரிகிறது. மேலும் தற்போது குணசேகரனின் அண்ணன் கதாப்பாத்திரத்தை சீரியல் குழு களமிறக்க உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் குணசேகரன் எழுதி வைத்து விட்டு சென்ற கடிதம் குறித்து நந்தினி கூறுகையில், இது என்ன புதுசாவா பன்றாறு இந்த ட்ராமாவ தான் அடிக்கடி பன்றாறே என்று கூறுகிறார். அதற்கு பட்டம்மாள், இந்த தடவை குணசேகரன் திரும்ப வருவான். வரப்போற குணசேகரன் ரொம்ப ஆபத்தான ஆளா வரப்போறான் என்கிறார்.
எதிர்நீச்சல் ப்ரமோ:
மேலும் விசாலாட்சி ஜான்சி ராணி இங்கேயே இருக்கட்டும் என்று சொல்கிறார். அதற்கு நந்தினி, அத்தை கண்டதையும் கொண்டு வந்து நடு வீட்ல வைக்குறேன்றிங்க என்கிறார். அதற்கு விசாலாட்சி கண்டவளுங்களோட கூத்தடிச்சி தான் என் புள்ளைய தொலச்சிட்டு நிக்குறேன் என அழுது கொண்டே கூறுகிறார். இதை கேட்டு நந்தினி அதிர்ச்சி அடைகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் ப்ரமோ.
கரிகாலன் மற்றும் ஆதிரை இதுவரை சேர்ந்து வாழவில்லை. இதனால் ஜான்சி ராணி கோவத்தில் இருக்கிறார். ஏற்கனவே கரிகாலனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என கூறியதால் ஜான்சி ராணி ஆதிரையிடம் மிக மோசமாக நடந்து கொண்டார். இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் இனி ஜான்சி ராணி ஆதிரையின் வீட்டில் இருக்கப்போவதாக காட்டப்பட்டுள்ளது.
எனவே ஜான்சி ராணி இனி ஆதிரையிடம் அலப்பறை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குணசேகரன் இல்லாமல் சீரியல் சற்று மந்தமாக செல்லும் நிலையில் தற்போது இயக்குனர் ஜான்சி ராணியை களமிறக்கி உள்ளார். எனவே வழக்கம் போல் நந்தினி, ரேணுகா, ஜான்சிராணி இடையே ஒரு பனிப்போர் தொடங்கும் என தெரிகிறது. எனவே இன்றைய எபிசோட் சற்று காரசாரமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
மயிலாடுதுறையில் கும்பாபிஷேகம் நடந்த கோயில்களில் துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு