மயிலாடுதுறையில் கும்பாபிஷேகம் நடந்த கோயில்களில் துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாததால் இந்த இரண்டு கோயில்களிலும் தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வதான்யேஸ்வரர் கோயில்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறை நம்பிக்கையில் ஈடுபாடு அற்றவர் என்றாலும், அவர் அதன் தன் குடும்பம் மற்றும் கட்சியினரிடம் ஒரு போதும் அதனை வற்புறுத்தியது கிடையாது. மற்றவர்களின் நம்பிக்கைக்கு முழு அங்கிகாரம் அளித்து வருபவர். இதனால் அவர் இறை நம்பிக்கை இல்லாததால் அவரது மனைவி மற்றும் திமுக கட்சியினர் பலர் இறை வழிபாட்டில் ஈடுபடுவதை பலரும் விமர்சித்து பேசி வருகின்றனர்.
தற்போது கூட சனாதனம் குறித்து பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்து அதன் காரணமாக திமுகவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டும் கட்சியினர் மற்றும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மனைவி கோயிலுக்கு செல்வதை எதிர் கட்சியினர் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழலில் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் (வள்ளலார்) கோயில் குரு பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோயில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வதான்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
அதனை அடுத்து திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சாமி கோயில் கடந்த செப்டம்பர் 3 -ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இரு கோயில்களிலும் கோயில் நிர்வாகம் சார்பில் துர்கா ஸ்டாலினுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
Chennai Airport: 20 சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் இடம் மாற்றம்..! குருவிகளால் வந்த வேதனை..!
வதான்யேஸ்வரர் கோயில் மற்றும் மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இரு ஆதீனங்கள் சார்பில் தமிழக முதல்வர் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாததால் இந்த இரண்டு கோயில்களிலும் தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டது குறிப்பிட்டதக்கது.