ஜீவாவின் காதல் பற்றிசொன்ன ஈஸ்வரியின் அப்பா.. இடிந்துபோன குணசேகரன்.. எதிர்நீச்சலில் வெடித்த பூகம்பம்
Ethir neechal September 1 episode :* நந்தினியின் அப்பா வந்த காரணம் என்ன?* ஈஸ்வரியின் அப்பா கிளப்பிவிட்டு பூகம்பம் நேற்றைய எதிர் நீச்சலில் என்ன நடந்தது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் வீட்டுக்கு சென்ற ஜனனியும், ஈஸ்வரியும் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வருகிறார்கள். வீட்டுக்கு வந்த நந்தினியின் அப்பா என்ன விஷயத்திற்காக வந்தார் என்பதை சொல்லாமல் இழுத்தடிக்கிறார்.
திரும்ப திரும்ப நந்தினி கேட்டதால் நந்தினியின் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாகவும் அதற்காக சில டெஸ்ட்களை எல்லாம் டாக்டர் எதுக்கு சொன்னார் என்பதை பற்றியும் சொல்கிறார். நந்தினி அவளுடைய அப்பாவை இதை என் என்னிடம் முன்னாடியே சொல்லவில்லை. இப்போது இங்கு சபைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு தகவல் சொல்வதுபோல சொல்கிறீர்களே என திட்டுகிறாள்.

"நாளைக்கு மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படும் என்பதால் சில சொத்துக்களை விற்றுவிடலாம் என யோசிக்கிறேன். நாளைக்கு இதை வைத்து ஒரு வில்லங்கத்தை உண்டு பண்ணக்கூடாது அல்லவா. அதுதான் சொல்லிவிட்டு போகலாம் என வந்தேன்" என சொல்கிறார். "இது நீங்க சம்பாதிச்ச சொத்துப்பா. அதை நீங்க என்ன வேணாலும் பண்ணலாம். யாருகிட்டேயும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்கிறாள் நந்தினி.
குணசேகரனும் கதிரும் நக்கலாக பேச அவர்களை எதிர்த்து சரியான பதிலடி கொடுக்கிறாள் நந்தினி. கடுப்பான கதிர் நந்தினியை அடிக்க கை ஓங்கி கொண்டு வருகிறான். அந்த நேரத்தில் ஈஸ்வரியின் அப்பா வந்து தடுத்து விடுகிறார். "எங்களுடைய சொத்தே ஊசலாடிக்கிட்டு இருக்கு" என குணசேகரன் சொல்ல "அது நிச்சயமா உங்க கிட்ட வந்துடும்" என ஈஸ்வரியின் அப்பா சொல்கிறார்.

அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் அவருடைய வீட்டுக்கு ஜீவானந்தம் வந்தது பற்றியும், ஜீவானந்ததோடு ஈஸ்வரி தனியாக பேசியது பற்றியும் அவன்தான் ஈஸ்வரி காலேஜ் படிக்கும்போது வந்து பொண்ணு கேட்டதையும் அவர் முடியாது என சொன்னதையும் ஒன்றுவிடாமல் அப்படியே குணசேகரனிடம் ஒப்பித்துவிடுகிறார்.
ரேணுகாவும் நந்தினியும் அவரை எவ்வளவு தடுத்தாலும் அதை அவர் காதில் வாங்கி கொள்ளாமல் அப்படியே உளறி கொட்டிவிட்டார். இதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். விசாலாட்சி அம்மா ஈஸ்வரியின் அப்பாவை திட்டுகிறார். "எங்க வந்து என்ன பேசணும்னு கூட உங்களுக்கு தெரியாதா. பெரிய பிரளயமே இங்க வெடிக்கப்போகுது" என்கிறார்.
குணசேகரன் அப்படியே இடிஞ்சு போய் வாசலில் உட்கார்ந்து விடுகிறார். நந்தினியும் ரேணுகாவும் அங்கே நடந்த விஷயம் அனைத்தையும் பற்றி ஈஸ்வரிக்கு போன் மூலம் தெரிவிக்கிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.





















