Entertainment Headlines June 13: காதலை போட்டு உடைத்த தமன்னா... சர சர ஆதிபுருஷ் அட்வான்ஸ் புக்கிங்...இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.
பிரபல வில்லன் நடிகர் கசான் கான் திடீர் மரணம்... சோகத்தில் ரசிகர்கள்
தமிழ் மற்றும் மலையாள மொழியில் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்த கசான் கான் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கஜன் கான் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக, மலையாள திரைப்பட தயாரிப்பாளரான என்.எம். பாதுஷா தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதையடுத்து அவருடன் சேர்ந்து பல படங்களில் நடித்த, மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமான திலீப் தனது சமூக வலைதள பக்கத்தில் கசான் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
ஆமாம்..! இவரைதான் காதலிக்கிறேன் - நடிகை தமன்னா ஓபன் டாக்.. இந்தி நடிகருடன் ரிலேஷன்ஷிப்..!
நடிகை தமன்னா தான் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். தங்களுக்கு இடையேயான இந்த உறவானது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 சீரிஸின் படப்பிடிப்பின் போது தொடங்கியதாக கூறியுள்ளார் . தமன்னா - விஜய் வர்மா முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென்சர்மா, ஆர் பால்கி மற்றும் சுஜோய் கோஷ் ஆகியோர் இயக்கியுள்ளனர். மேலும் படிக்க
மாஸ் காட்டும் ஆதிபுருஷ் அட்வான்ஸ் புக்கிங்... உற்சாகத்தில் படக்குழு!
ஆதிபுருஷ் திரைப்படம் இந்த வார வெள்ளிக்கிழமை (ஜூன் 16) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக க்ரித்தி சனோன், இராவணனாக சைஃப் அலி கான், ஹனுமனாக தேவதத்தா நாக் ஆகியோர் நடித்துள்னர். ஓம் ராவத் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், பிரபல மராத்திய இசையமைப்பாளர்களான அஜய் - அதுல் ஜோடி இசையமைத்துள்ளனர். மேலும் படிக்க
நகைச்சுவை அருமருந்து.. ரசிகர்களை கவர்ந்த ‘முண்டாசுப்பட்டி’.. இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவு..!
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ‘முண்டாசுப்பட்டி’ படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பொதுவாக சினிமாவில் வித்தியாசமான கதைகள் கொண்ட படங்கள் வந்தாலும் சில படங்கள் தான் நம் மனதுக்கு நெருக்கமாகவும், மன அழுத்தத்தை குறைக்கும் அருமருந்தாகவும் அமையும். இதில் இந்த இரண்டாவது ரகத்தில் அமைந்த சிறந்த படங்களில் ஒன்று தான் ‘முண்டாசுப்பட்டி’. மேலும் படிக்க
எஸ்.ஜே.சூர்யாவோடு நடிக்க பயந்தேன்.. ஷூட்டிங்கில் நடந்ததை போட்டுடைத்த நடிகை சாந்தினி..!
நடிகர் எஸ்.ஜே.சூர்யாவோடு நடிக்க பயந்ததாக பொம்மை படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை சாந்தனி தெரிவித்துள்ளார். அழகியே தீயே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராதா மோகன். யதார்தமான காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்த அவர் பொன்னியின் செல்வன், மொழி, அபியும், நானும், பயணம், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் படிக்க