Entertainment Headlines: ஃபைட் கிளப், கண்ணகி படங்களின் விமர்சனம்.. ஆதிக் திருமணம்.. சினிமா செய்திகள் இன்று!
Entertainment Headlines: திரையுலகில் இன்றைய அதாவது டிசம்பர் 15ஆம் தேதி முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
தனுஷ் இயக்கத்தில் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார்.. வெளியான மாஸ் அப்டேட்!
பவர் பாண்டி, டி50 ஆகிய படங்களை அடுத்து நடிகர் தனுஷ் மூன்றாவதாக இயக்கும் படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ், சரத்குமார், வரலட்சுமி, ராதிகா உள்ளிட்டோர் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் படிக்க
விஷால் முதல் லெஜெண்ட் சரவணன் வரை... ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணத்திற்கு வந்த பிரபலங்கள்...
தமிழ் சினிமாவின் இளம் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் இன்று நடைபெற்றது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேத்தியும், நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவை இன்று கரம் பிடித்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற அவர்களின் திருமண விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினர். மேலும் படிக்க
சிறப்பா சண்டை பண்ணாங்களா.. லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள ‘ஃபைட் கிளப்’ பட விமர்சனம்!
படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற வகையில் படம் முழுவதும் சண்டைக் காட்சிகள் அதிகம் நிறைந்திருக்கின்றன. மனிதர்களிடையே இயல்பாகவே கொதித்துக் கொண்டிருக்கும் வன்முறையைத் தூண்டி விடும் சூழல்களை உருவாக்கி, அதன் மேல் ஒரு திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் அபாஸ். சிறு வயதில் இருந்தே கால்பந்தாட்டத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவனாகவும், இயல்பாகவே திறமையுள்ளவனாகவும் இருக்கிறான் செல்வா (விஜயகுமார்) . மேலும் படிக்க
விக்னேஷ் சிவனின் புதிய படம் எல்.ஐ.சி.! பிரதீப் ரங்கநாதனுக்கு மற்றொரு ப்ளாக்பஸ்டரா?
LIC Film: விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு எல்ஐசி (Love Insurance Corporation) என பெயரிடப்பட்டுள்ளது. இதில் லவ் டுடே படத்தில் நடித்து பிரபலமான பிரதீப் மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கின்றனர். மேலும் படிக்க
நான்கு பெண்களின் கதை.. பெண்ணியம் பேசும் 'கண்ணகி' படம் எப்படி இருக்கு?
சமகாலத்தில் வாழும் நான்கு பெண்கள் சந்திக்கும் பெண்ணியம் சார்ந்த பிரச்சினைகளை எடுத்துக் கூறும் திரைப்படமாக உருவாகியுள்ளது கண்ணகி. நீண்ட நாட்களாக திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்ணாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார், திருமணத்திற்கு முன் கருவுற்று கருவை கலைக்க முயற்சிக்கும் பெண்ணாக கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கிறார். மேலும் படிக்க
யாழ்ப்பாணம் கோயிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்த ரம்பா.. ஆனால் இலங்கை சென்ற காரணமே வேறு..!
பிரபல நடிகை ரம்பா யாழ்ப்பாணத்தில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தனக்கென இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் ரம்பா. 1993 ஆம் ஆண்டு தமிழில் பிரபு நடித்த உழவன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் ரஜினி,விஜய், அஜித், பிரபுதேவா, சரத்குமார், சத்யராஜ், அர்ஜூன், கார்த்திக் என அந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவரது படங்களிலும் ஹீரோயினாக நடித்தார். மேலும் படிக்க