மேலும் அறிய

Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!

எந்திரவியல் ஆய்வகங்களின் (Robotic Labs) துவக்க விழா இன்று திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனைக் கற்றுக் கொள்ளவும், படைப்பாற்றலை வளர்க்கவும் 15 மாவட்டங்களில் தலா ஒரு எந்திரவியல் ஆய்வகம் என்ற கணக்கில் 15 எந்திரவியல் ஆய்வகங்கள் ரூ. 6.09 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டு உள்ளன.

இந்த எந்திரவியல் ஆய்வகங்களின் (Robotic Labs) துவக்க விழா இன்று திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.


Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!

சிறப்பம்சங்கள்:

Ø      இதற்கான பாடத்திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டு உள்ளது.

Ø      இப்பாடத்திட்டத்தில் வகுப்பு ஒன்றுக்கு 11 வகையான உபகரணங்கள் வாயிலாக 10 பரிசோதனைகள் உருவாக்கப்பட்டு 90% செய்முறை கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

Ø      இதன் மூலம் 15 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் விரைவில் Multi-functional Robotics, STEM Workstation Powered by Prototyping Virtual Labs, Colour Sorter Programmable Robotics, Smart Dustbin Programmable Robotics, Hungry Robot Programmable Robotics, Life Size Voice Controlled Robot, DRONE இயக்கம் மற்றும் அடிப்படை மின்னணுவியல் ஆகிய தலைப்புகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Robotics Lab பாடத்திட்டமானது, மாணவர்களின் கற்றல் திறனில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Ø      தொழில்நுட்பத் திறன்: எளிய மின்சுற்றுகள் (Simple circuit), பிரட்போர்டு (Breadboard) பயன்பாடு மற்றும் சென்சார்கள் (Sensors - Ultrasonic, Gas sensor) ஆகியவற்றைக் கையாள்வதன் மூலம் மின்னணுவியல் மற்றும் பொறியியல் சார்ந்த அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள இயலும்.

Ø      படைப்பாற்றல் மற்றும் வடிவமைப்பு சிந்தனை: "Solar House", "Frog Bot DIY", "Smart Dustbin", "Carnival Ride" போன்ற திட்டங்கள் மாணவர்களின் கற்பனைத் திறனையும், ஒரு பொருளை புதிதாக வடிவமைக்கும் (Design Thinking) திறனையும் ஊக்குவிக்கும்.

Ø      சிக்கல் தீர்க்கும் திறன் (Problem Solving): "Obstacle avoiding", "Line Follower Robot" போன்ற தானியங்கி இயந்திரங்களை உருவாக்கும்போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்வதன் மூலம் அவர்களின் பகுப்பாய்வு திறன் மேம்படும்.

Ø      இன்றைய நவீன உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் துறையை நோக்கி நகர்கிறது. இவ்வகுப்புகள் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களாக உருவெடுக்கத் தேவையான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.

Ø      மேற்கண்ட பள்ளிகள் அதனை சுற்றியுள்ள இதர பள்ளிகளுக்கு HUB பள்ளியாகச் செயல்பட்டு மற்ற பள்ளிகளின் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

Ø    ஆண்டு இறுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாகச் செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

எனவே, இந்த எந்திரவியல் ஆய்வகங்கள் வெறும் தொழில்நுட்பப் பயிற்சி மட்டுமல்ல; இது மாணவர்களின் சிந்தனை முறையையே மாற்றக்கூடிய ஒரு முழுமையான கல்வித் திட்டமாகும். இது அரசுப்பள்ளி மாணவர்களை நாளைய உலகின் சவால்களை எதிர்கொள்ளத் தயார் செய்து, திறன்மிக்க படைப்பாளர்களாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijaya Baskar Gutkha case : தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்
தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Embed widget