Star Release Date: சம்மரில் சிறப்பான கொண்டாட்டம்! கவினின் 'ஸ்டார்' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
Star Release date : இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்து வரும் 'ஸ்டார்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணித்து வெற்றி பெற்ற சிலரில் ஒருவர் நடிகர் கவின். 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் ஃபேவரட்டான தொடர்களில் ஒன்றான 'கனா காணும் காலங்கள்' தொடர் மூலம் திரையில் அறிமுகமானார் கவின். அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஆல் டைம் ஃபேவரட் எவர்க்ரீன் தொடரான 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் மிகவும் பிரபலமான ஒரு நடிகரானார். அதைத் தொடர்ந்து ஏராளமான சீரியலில் நடித்து வந்த கவினுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு பணப்பெட்டியுடன் வெளியேறிய கவின் வாழ்க்கையே மாறிப் போனது.
ஹீரோவான கவின் :
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் கவினைத் தேடி வந்தன. திரில்லர் ஜானரில் வெளியான 'லிப்ட்' திரைப்படம் மூலம் ஹீரோவானார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் ரீதியாகவும் கல்லா கட்டிய அப்படத்திற்கு பிறகு அவருக்கு வரிசையாக பட வாய்ப்பு வந்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரானார்.
டர்னிங் பாய்ண்ட் :
கடைசியாக வெளியான 'டாடா' திரைப்படம் கவினுக்கு மிகப்பெரிய டர்னிங் பாய்ண்ட் படமாக அமைந்தது. அவரின் பண்பட்ட நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் வெளியான 'பியார் பிரேமா காதல்' திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' என்ற படத்தில் நடித்துள்ளார் நடிகர் கவின். லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ரிலீஸ் தேதி :
கவினின் 'ஸ்டார்' படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மே மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் கவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சம்மர் விடுமுறையைக் கொண்டாடும் வகையில் இந்தப் படம் வெளியாவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
அடுத்தடுத்த ப்ராஜெக்ட் :
மேலும் நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிவபாலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். அது தவிர இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநர் ஒருவரின் படத்தில் கவின் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
பிராவுடன் கவின் :
இந்நிலையில் இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கவின் நடித்துள்ள ஒரு திரைப்படம் ஒன்று இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ப்ரித்தி அஸ்ரானி ஹீரோயினாக நடிக்க நடிகர் பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வரிசையாக படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியான ஒரு நடிகராக வலம் வருகிறார் நடிகர் கவின்.