(Source: ECI/ABP News/ABP Majha)
Dune 2 Trailer: 24 மணிநேரத்தில் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்த டியூன் ட்ரெய்லர்!
டியூன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. வெளியான 24 மணிநேரத்தில் 7 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது இந்த ட்ரெய்லர்
டியூன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாக 7 மில்லியன் பார்வையாளர்க்ளை கடந்துள்ளது இந்த ட்ரெய்லர். இந்தப் படம் வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1965இல் வெளியான ஃபிராங் ஹிபர்ட் என்பவர் எழுதிய ஆங்கிலத்தில் வெளிவந்த புத்தகத்தை மையமாக கொண்டு உருவானத் திரைப்படம் டியூன். உலகம் முழுவதும் இருக்கும் புத்தக வாசகர்களிடம் பரவலாக அறியப்படும் புத்தகம் டியூன். இந்த புத்தகம் மொத்தம் 15 சீரிஸாக எழுத்தப்பட்டது இதன் பெரும் சாதனை. புத்தகத்தின் முதல் தொடரை மையமாக எடுக்கப்பட்ட படம் தான் டியூன். கிட்டதட்ட 400 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தை இரண்டு பாகங்களாக எடுக்க படத்தின் இயக்குனர் டென்னிஸ் வில்லன்யூ முடிவு செய்தார். இதன் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டியூன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இந்தப் படத்தில் புகழ்பெற்ற நடிகர்களான ஆஸ்டின் பட்லர், டிமதி சேலமெட், ஜெண்டாயா, ஃப்ளோரன்ஸ் ப்யூ,ரெபெக்கா ஃப்ர்குசன் ஆகியவர்கள் நடித்திருந்தனர். டியூன் திரைப்படம் அடிப்படையில் ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் படம். பிரபஞ்சத்தை முழுவதும் கட்டுபடுத்த பயன்படும் ஒரு முக்கியமான பொருளை பகைவர்களிடம் இருந்து காப்பாற்றும் ஒரு மகத்தான குடும்பத்தின் கதை டியூன். இந்தப் படம் 78 ஆவது வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சுமார் 165மில்லியன் டாலர் செலவில் எடுக்கப் பட்ட இந்தப் படம் சுமார் 400 மில்லியன் டாலர் வசூல் சாதனைப் படைத்தது. ஐ.எம். டிபி யில் இந்தப் படத்திற்கு 8/10 மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகிய வெறும் 24 மணிநேரங்களில் 7 மில்லியன் வியூவ்ஸை எட்டியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பைக் காட்டுகிறது. டியூன் திரைப்படம் ஒரு ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டென்னிஸ் வில்லன்யூ
டியூன் படத்தின் இயக்குனர் டென்னிஸ் வில்லென்யூ. இவர் இன்செண்டீஸ்,எனிமி,அரைவல், ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைக் கொண்டவர் டென்னிஸ். இவர் இயக்கிய அரைவல் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான அஸ்கர் விருதை வென்றார்.
டிமதி சேலமெட்
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள டிமதி சேலமெட் அண்மைக் காலங்களில் அதிகம் பேசப்படும் நடிகர்கள் பட்டியலில் இருந்து வருகிறார். உலகம் முழுவதும் இருக்கும் உலக சினிமா ரசிகர்களின் கவணத்தைப் பெற்று வருகிறார் டிமதி. இவர் நடிப்பில் வெளிவந்த கால் மி பை யூவர் நேம் திரைப்படம் ஒரு பதின் வயது இளைஞனுக்கும் அவனைவிட வயதில் மூத்த ஒரு ஆணிற்கு இடையில் ஏற்படுன் காதலை கதையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடித்த டிமதி விமர்சகர்களிடம் அவரது நடிப்பிறகாக பெரிதும் பாராட்டப் பட்டார். தற்போது டியூன் இரண்டாம் பாகத்தில் இவர் நடிப்ப பார்ப்பதற்கு பெரும் ஆர்வம் எழுந்துள்ளது