மேலும் அறிய

Dulquer Salmaan : ”இனி நடித்தால் இந்த மொழி படம்தான்” : சீதாராமம் பட வெற்றியால் துல்கர் சல்மான் அதிரடி முடிவு

நாகி மற்றும் வைஜெயந்தி எனக்கு மகாநதியில் ஜெமினி கணேசன் கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்தனர். அந்த படத்திற்கு நான் எதிர்பார்த்ததை விட கிடைத்த அன்பும் மரியாதையும்  அதிகம்.

சீதாராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் தெலுங்கு  ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இயக்குநர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “சீதாராமம்”. தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம்  இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படம் நிச்சயம் அனைவரையும் கவரும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  பலரும் சீதாராமம் படம் திரையரங்குகளில் கூட்டத்துடன் கொண்டாடப்பட வேண்டும் என்றும், சீதாராமம் ஒரு காவியக் காதல் போல் காட்சியளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். இப்படம் முதல் வார இறுதியில் ரூ.10 கோடி வசூல் செய்தது. 

View this post on Instagram
 
A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

இந்நிலையில் தெலுங்கு ரசிகர்களுக்கு துல்கர் சல்மான் அன்பு நிறைந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது முதல் படத்திலிருந்து தெலுங்கு திரையுலக ரசிகர்களிடத்தில் கிடைத்த அன்பு குறித்து தெரிவித்துள்ளார். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் நான் நடித்த ஓ காதல் கண்மணி படம் தெலுங்கில்  ஓ பங்காரம் என டப் செய்யப்பட்டு வெளியானது. மணி சாருக்கு நன்றி. ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் எனக்கு வாய்ப்பு கொடுத்து என் மீது மிகுந்த அன்பு காட்டினீர்கள். அதன்பிறகு நாகி மற்றும் வைஜெயந்தி எனக்கு மகாநதியில் ஜெமினி கணேசன் கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்தனர். அந்த படத்திற்கு நான் எதிர்பார்த்ததை விட கிடைத்த அன்பும் மரியாதையும்  அதிகம். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,  குரூப் போன்ற படங்கள் டப் செய்யப்பட்ட போது கொடுக்கப்பட்ட ரெஸ்பான்ஸ் மறக்கவே முடியாதது. 

அதன்பின் சீதா ராமம் படத்துக்கு  ஸ்வப்னாவும் ஹனுவும் என்னை அணுகியபோது நான் பாதுகாப்பான கைகளில் இருக்கிறேன் என உணர்ந்தேன். தரமான படத்தை வழங்குவோம் என்று எனக்கு இருந்த நம்பிக்கை இனி நேரடியான தனித்துவம் வாய்ந்த தெலுங்குப் படங்களில் மட்டுமே எப்போதும் நடிக்க விரும்புகிறேன்.  ஹனு, மிருணாள், ராஷ்மிகா, சுமந்த் அண்ணா, விஷால், பி.எஸ்.வினோத் சார் மற்றும் பல கலைஞர்கள் ஆகியோரின் பங்கை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தெலுங்கின் சினிமாவை விரும்பும் பார்வையாளர்களுக்கு நன்றி. சினிமாக் கலையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு நன்றி. என்னை உங்களில் ஒருவனாக நினைக்க வைத்ததற்கு நன்றி. மேலும் நீங்கள் எங்கள் மீது பொழியும் அனைத்து அன்பும் நன்றியுணர்வு நிறைந்தது என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget