நடிகர் துல்கர் சல்மானின் 'காந்தா’வில் இருந்து நடிகர் சமுத்திரக்கனியின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது!
துல்கர் சல்மான் தற்போது நடித்து வரும், 'காந்தா' படத்தில் இருந்து சமுத்திரக்கனியின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. தற்போது இந்தப் படத்தில் இருந்து நடிகர் சமுத்திரக்கனியின் கதாபாத்திர போஸ்டர் ‘அய்யா’, ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
'அய்யா’வாக அவரது தோற்றம் கம்பீரமாக இந்த போஸ்டரில் உள்ளது. அதிலும் இந்த புதிய போஸ்டரில் ’துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம், இந்தப் படத்தில் சமுத்திக்கனி கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரிகிறது.
ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக துல்கர் சல்மான் மாறியுள்ளார். செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா டகுபதி, சித்திக், அனிகா சுரேந்திரன் மற்றும் சௌபின் ஷாஹிர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டேனி சான்செஸ்-லோபஸ், ஒளிப்பதிவு செய்ய, லெவெலின் அந்தோணி கோன்சால்வ்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜானு சாந்தர், என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















