Manmatha leelai: மன்மத லீலை அந்த மாதிரி படமில்லை; எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கு - வெங்கட் பிரபு !
மன்மத லீலை படம் தொடர்பாக இயக்குநர் வெங்கட் பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.
![Manmatha leelai: மன்மத லீலை அந்த மாதிரி படமில்லை; எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கு - வெங்கட் பிரபு ! Director Venkat Prabhu opens about his upcoming film Manmatha leeali in its trailer launch function yesterday Manmatha leelai: மன்மத லீலை அந்த மாதிரி படமில்லை; எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கு - வெங்கட் பிரபு !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/22/03e14b9d2bd4a62c8033110f94d45994_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபுவின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு எல்லோருக்கும் எழுந்தது. இந்த சூழலில் அவர் தனது உதவியாளர் மணிவண்ணன் எழுதியிருக்கும் கதையை, “மன்மத லீலை” என்ற பெயரில் இயக்குகிறார். இந்தப் படத்தில், அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட்பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த ட்ரெய்லரை பார்த்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆகியோரும் பாராட்டி வந்தனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு பேசியுள்ளார். அதில், “மன்மத லீலை படம் ஒரு கில்மா படமல்ல. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்ற போது இந்தக் கதை தோன்றியது. எனக்கும் பெண் குழந்தைகள் உள்ளனர். நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் அனைத்து வயதினரும் ரசித்து பார்க்கும் வகையில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Here is our #manmadhaleelaiTrailer let’s spread love!! Have fun!! https://t.co/iNyzPWIn03 #aVPquickie #manmadhaleelai
— venkat prabhu (@vp_offl) March 21, 2022
இதைத் தொடர்ந்து இந்த விழாவில் பேசிய படத்தின் கதாநாயகன் அசோக் செல்வன்,வெங்கட் பிரபு படங்கள் அனைத்தும் தனக்கு பிடிக்கும் என்றும், இப்போது அவருடன் வேலை செய்தது கனவு நனவு ஆனது போல் இருப்பதாகவும், இந்தப் படத்தை வேகமாக எடுத்து முடித்துவிட்டதாகவும் பேசினார்.
இந்தப் படம் ஷூட்டிங்கின் போது தனக்கு கொரோனா வந்ததாகவும், அந்த நேரத்தில் லிப் கிஸ் காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும், கொரோனா வந்த நேரத்தில் முத்த காட்சிகளில் நடித்திருந்தாலும் ஹீரோயின்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றும் கூறினார். இந்த படத்தில் ஏன் நடித்தீர்கள் என்று பலரும் கேட்டதாகவும், தனக்கு கதை பிடித்திருந்ததால் நடித்ததாகவும் கூறிய அசோக் செல்வன், இதில் தவறான விஷயங்கள் எதுவுமில்லை என்றும் தெரிவித்தார்.
Also Read | Simbu Balmain Pant: ஆத்தே..! சிம்பு போட்ருக்க பேண்ட் விலை இவ்ளோவா..? வாயைப் பிளந்த ரசிகர்கள்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)