மேலும் அறிய

Aadhalal Kadhal Seiveer: குறுக்கே வந்த விஜய் படம்.. ஓடாமல் போன நல்ல படம்.. வருத்தப்பட்ட சுசீந்திரன்

படத்தின் கடைசி காட்சி தான் படம் பார்த்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கண் கலங்க வைத்திருக்கும். அப்படிப்பட்ட படம் பெரிதாக வெற்றிப்பெறவில்லை.

இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய ஆதலால் காதல் செய்வீர் படம் ஏன் பெரிய அளவில் வெற்றியடையவில்லை என நேர்காணல் ஒன்றில் தெரிவித்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். அதனைத் தொடர்ந்து நான் மகான் அல்ல,அழகர் சாமியின் குதிரை, ராஜபாட்டை, பாண்டிய நாடு,  ஜீவா, மாவீரன் கிட்டு, பாயும் புலி, நெஞ்சில் துணிவிருந்தால், ஜீனியஸ், கென்னடி கிளப், சாம்பியன், ஈஸ்வரன், குற்றம் குற்றமே உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். 

இதனிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஆதலால் காதல் செய்வீர் படம் வெளியானது. இப்படத்தில் சந்தோஷ் ரமேஷ், மனிஷா யாதவ், ஜெயபிரகாஷ், அர்ஜூனன், துளசி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தை நல்லு ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தது. இளம் வயதினரிடையே இருக்கும் காதல், காமம், குழந்தைகளை பெற்றெடுத்து வீதியில் விட்டு செல்வது என பல விஷயங்களை இந்த படம் சிறப்பாக பேசியிருந்தது. 

படத்தின் கடைசி காட்சி தான் படம் பார்த்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கண் கலங்க வைத்திருக்கும். அப்படிப்பட்ட படம் பெரிதாக வெற்றிப்பெறவில்லை. இதுதொடர்பாக ஒரு நேர்காணல் ஒன்றில், “ஆதலால் காதல் செய்வீர் படம் ஒரு அற்புதமான திரைப்படம். அந்த படம் என்ன ஒரு அற்புதமான கருத்தை சொல்லியதோ, அந்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. அதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?” என்ற கேள்வி சுசீந்திரனிடம் எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘அந்த நேரம் விஜய் நடித்த தலைவா படம் சில பிரச்சினைகளால் ரிலீஸ் செய்ய முடியாமல் போய் விட்டது. அந்த படம் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாவதாக இருந்தது. ஆனால் பிரச்சினை காரணமாக அடுத்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 15ஐ ஒட்டி வெளியாகலாம் என கூறப்பட்டது. அதுவும் இல்லை என ஆகஸ்ட் 13 ஆம் தேதி தெரிய வந்தது. இதனால் அடுத்த 2 நாட்களில் படத்தை வெளியிடலாம் என தயாரிப்பு தரப்பு விரும்பினர். இதனால் பெரிய விளம்பரம் இல்லாமல் ஆதலால் காதல் செய்வீர் வெளியானது.

கிடைக்கும் இடைவெளியை பயன்படுத்தி ரிலீஸ் செய்யலாம் என சொல்லி வெளியானது. அதற்கு அடுத்த வாரம் தலைவா படம் வெளியானது. ரெட் ஜெயன்ட் தான் தியேட்டரில் வெளியிட்டார்கள். அந்த ஒரு வாரம் முடிந்த பிறகு 20 ஆம் தேதி தலைவா படம் வெளியானதும் ஆதலால் காதல் செய்வீர் படத்தை தூக்கி விட்டார்கள் என சுசீந்திரன் அந்த நேர்காணலில் தெரிவித்திருப்பார்.  

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget