நயன்தாரா பழக்கமே அதுதான்...மூக்குத்தி அம்மன் பட சர்ச்சை பற்றி சுந்தர் சி
Sundar C On Nayanthara : மூக்குத்தி அம்மன் பட பூஜையின் போது ஏற்பட்ட சர்ச்சை குறித்து இயக்குநர் சுந்தர் சி விளக்கமளித்துள்ளார்

சுந்தர் சி இயக்கி வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மூக்குத்தி அம்மன் பட பூஜையின் போது நயன்தாராவுடன் ஏற்பட்ட் சர்ச்சை குறித்து சுந்தர் சி விளக்கமளித்துள்ளர்.
மூக்குத்தி அம்மன் 2
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சிமேக்ஸ், ஐ.வி. ஓய் என்டர்டெய்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் -2 பாகம் உருவாகிறது. முதல் பாகத்தைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா இதிலும் மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார். கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் குஷ்பு, மீனா, ரெஜினா கெசென்ரா நயன்தாரா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் நயன்தாரா மற்றும் மீனா இடையில் சர்ச்சை ஏற்பட்டதாக பல தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்ரில் சுந்தர் சி தற்போது விளக்கமளித்துள்ளார்
நயன்தாரா பற்றி சுந்தர் சி
" செய்திகளில் வெளியானது போல் எந்த பிரச்சனையும் எங்களுக்கு இடையில் ஏற்படவில்லை. அந்த செய்தி எதனால் பரவியது என்று தெரியவில்லை. முதலில் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்தது. நயன்தாரா ரொம்ப டெடிகேட்டான ஒரு நடிகர். படப்பிடிப்பில் ஒரு அரை மணி நேரம் கேப் இருந்தால் நான் அவரை கேரவான் போகச் சொல்வேன். ஆனால் லொக்கேஷனில் இருப்பது தான் அவரது பழக்கமே. காலையில் லொக்கேஷன் வந்தால் மாலை ஷூட் முடிவது வரை அவர் செட்டில்தான் இருப்பார். இந்த மாதிரி வெளியாகும் எல்லா தகவல்களுக்கும் நான் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது' என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
Finally rumor has ended 🫠 #mookuthiamman2
— Nayan wings (@Nayan_Universal) April 22, 2025
Lady super star very very Dedicated Person 😫 #Nayanthara #LadySuperStar #SundharC pic.twitter.com/rtUCyDEv9C

