S S Rajamouli : ஆஸ்கர் விருதுக்குழுவில் உறுப்பினராக இணைந்த இயக்குநர் ராஜமொளலி..
ஆஸ்கர் விருதுக் குழுவில் பாகுபலி , ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்டப் படங்களை இயக்கிய எஸ்.எஸ் ராஜமெளலி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
ஆஸ்கர் விருது குழு
ஆஸ்கர் விருதுக் குழுவில் சேர உலகத்தில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் வருடந்தோறும் அழைக்கப் படுவார்கள். ஆளுமைப் பண்பு , சமுத்துவ நோக்கம் கொண்ட கலைஞர்களே இந்த குழுவில் உறுப்பினர்களாக சேர்வதற்கான தகுதி பெற்றவர்களாக கருதப் படுகிறார்கள். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது குழுவில் சேர்வதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 487 நபர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. இதில் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்ட 71 கலைஞர்களும் விருது வென்ற 19 கலைஞர்களும் இந்த குழுவில் தேர்வு செய்யப் பட்டுள்ளார்கள்.
ஆஸ்கர் குழுவில் சேர்ந்த ராஜமெளலி
ஆஸ்கர் விருது குழுவில் இந்தியா சார்பாக ஏற்கனவே நடிகர் சூர்யா , இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் , இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டவர்கள் இந்த குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உறுப்பினராக சேர்வதற்காக இந்திய திரைபிரபலங்கள் இயக்குநர் ராஜமெளலி , நடிகை ஷபானா ஆஸ்மி , ஒளிப்பதிவாளர் ரவிவர்மண் , மற்றும் இயக்குநர் ரீமா தாஸ் , நாட்டு நாட்டு பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக் குழுவின் புதிய உறுப்பினராக சேர்ந்துள்ள இந்திய பிரபலங்களுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Shabana Azmi, SS Rajamouli, Rama Rajamouli, Ritesh Sidhwani and several other Indians were invited to join The Academy. They extended invites to 487 people across various fields for Class of 2024 #SSRajamouli#RamaRajmouli#OscarsAcademy pic.twitter.com/oYwmcb0q1m
— jokesman (@jokeman_joke) June 26, 2024
ஆஸ்கர் விருதுக்குழுவில் தேர்வான கலைஞர்களின் முழு பட்டியலைப் பார்க்க :
View this post on Instagram
மேலும் படிக்க : Kalki 2898 AD : 1 மில்லியனை கடந்த முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங்... ஆர்.ஆர்.ஆர், பாகுபலியின் சாதனையை முறியடிக்குமா கல்கி 2898 AD?
Siragadikka Aasai serial June 26 : முத்துவிடம் தர்ம அடி வாங்கிய மனோஜ்... சிறகடிக்க ஆசையில் இன்று..