மேலும் அறிய
Advertisement
Kalki 2898 AD : 1 மில்லியனை கடந்த முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங்... ஆர்.ஆர்.ஆர், பாகுபலியின் சாதனையை முறியடிக்குமா கல்கி 2898 AD?
Kalki 2898 AD: கல்கி 2898 AD திரைப்படம் வெளியாக இன்னும் ஒரே நாள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் முந்தைய ரெக்கார்டுகளை முறியடித்து சாதனை படைத்து வருகிறது.
வைஜயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் கல்கி 2898 AD. அறிவியல் புனைகதை மற்றும் புராணங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள உள்ள இப்படம் வரும் ஜூன் 27-ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது. அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன், கமல்ஹாசன், ஷோபனா, அனா பென், திஷா பதானி, பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் , இந்தி , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது.
இதுவரையில் எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு கல்கி 2898 AD படத்தின் அட்வான்ஸ் புக்கிங் படு ஜோராக நடைபெற்று வருகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் டிக்கெட்டின் விலை முதல் வாரத்திற்கு மட்டும் உயர்த்த தெலங்கானா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கல்கி 2898 AD படம் வெளியாக இன்னும் ஒரே நாள் தான் உள்ள நிலையில் இந்தியாவிலும் உலகளவிலும் டிக்கெட் முன்பதிவு 1 மில்லயனையும் கடந்து விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்து வருகிறது. படம் வெளியாவதற்கு முன்னரே 37 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளது என வர்த்தக வலைத்தளமான Sacnilkல் வெளியான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது 50 கோடி வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கல்கி 2898 AD படத்தின் முதல் நாள் காட்சிக்கான அட்வான்ஸ் புக்கிங்கில் அதிக ஓப்பனிங் டே அட்வான்ஸ் புக்கிங் என்ற சாதனை படைத்துள்ளது. இதுவரையில் 14 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது பிரபாஸின் 'சலார்' படத்தை காட்டிலும் 2 கோடி அதிகமாகும். முன்பதிவு டிக்கெட் நிலவரப்படி 11 லட்சம் டிக்கெட்களை விற்பனை செய்து தெலுங்கு மார்க்கெட் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் இந்தி வெர்ஷனும் நல்ல ஒரு டிக்கெட் முன்பதிவை விற்பனை செய்து வருகிறது.
கல்கி 2898 AD படம் வெளிநாடுகளில் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என்றும் இந்தியாவில் சுமார் 180 முதல் 200 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி 200 கோடிக்கும் மேல் வசூலித்தால் 2017ம் ஆண்டு வெளியான பாகுபலி மற்றும் 2022ம் ஆண்டு வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் இந்திய படமாக இருக்கும்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion