Beast : பீஸ்ட்-காக நெல்சனுக்கு நன்றி சொன்ன செல்வராகவன்..! செல்வராகவனுடன் பணியாற்றியதை பெருமையாக கருதிய நெல்சன்..!
பீஸ்ட் படத்தில் பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்த செல்வராகவனுக்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து பிரபல இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். செல்வராகவன் ஏற்கனவே சாணி காகிதம் படத்தில் நடித்து வந்தாலும் அவரது நடிப்பில் இந்த படம்தான் முதலில் வெளியாகிறது.
My sincere thanks to @Nelsondilpkumar. So grateful to him. And #BeastTrailer is mind blowing !!
— selvaraghavan (@selvaraghavan) April 3, 2022
இந்த நிலையில், பீஸ்ட் படத்தில் நடித்தற்கு நன்றி தெரிவித்து செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நெல்சன் திலீப்குமாருக்கு எனது பணிவான நன்றிகள். அவருக்கு மிகவும் நன்றி. பீஸ்ட் ட்ரெயிலர் மைண்ட் ப்ளோயிங்” என்று பதிவிட்டுள்ளார்.
@selvaraghavan sir, very happy that you are part of beast, it was a pleasure working with you! Glad you like the trailer 😊🙏😇 https://t.co/vpf0fMPVxu
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) April 3, 2022
அவரது பதிவிற்கு பதிலளித்துள்ள நெல்சன் திலீப்குமார், செல்வராகவன் சார் நீங்கள் பீஸ்ட் படத்தில் ஒரு பார்ட்டாக இருந்ததற்கு மிக்க நன்றி. உங்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. உங்களுக்கு ட்ரெயிலர் பிடித்திருந்ததற்கு நன்றி.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகர் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ந் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து, பீஸ்ட் படத்தின் டிரெயிலர் நேற்று வெளியானது. இதற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மாலின் உள்ளே நடக்கும் கடத்தல்காரர்களுக்கும், ராணுவ வீரரான விஜய்க்கும் இடையேயான கதையாக பீஸ்ட் உருவாகியிருப்பது போன்று ட்ரெயிலரில் காட்டப்பட்டுள்ளது. செல்வராகவன் உயர் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், செல்வராகவன் நெல்சனுக்கு நன்றி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்திற்கு அடுத்த நாள் ஏப்ரல் 14-ந் தேதி கே.ஜி.எப்.2 படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்