Selvaraghavan : நீங்க அவ்ளோவா காஞ்சு போயா இருக்கீங்க.. ஆன்மீக குருக்களா? வெளுத்து வாங்கிய செல்வராகவன்
உண்மையான ஆன்மீக குருவை நீங்கள் தேடிச்செல்ல தேவையில்லை. அவரே உங்களைத் தேடி வருவார் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்
செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றி பேசியிருந்தார். பல்வேறு கலைஞர்கள் தங்கள் கடின உழைப்பை கொடுத்த ஒரு படத்திற்கு கடைசிவரை எந்தவித அங்கீகாரமும் கிடைக்கவில்லை என அவர் இந்த வீடியோவில் பேசியிருந்தார்.
ஆயிரத்தில் ஒருவன் படம் ஏற்படுத்திய காயத்தினால்தான் இன்றுவரை கண்ணீர் சிந்தி வருவதாக அவர் தெரிவித்திருந்தது ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்தது.
சமீபத்தில் பள்ளி மாணவர்களிடம் மூட நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக மகாவிஷ்ணு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இது குறித்து குறித்து செல்வராகவன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதே நேரம் புத்தர் சொல்லும் வழியில் தியானம் செய்வதற்கான டிப்ஸை கொடுத்துள்ளார் செல்வராகவன்
யார் உண்மையான ஆன்மீக குரு?
”யாரோ ஒருத்தர் எதையோ உளறிக்கிட்டு நான் தான் ஆன்மீக குரு என்று சொன்னால் நீங்களும் பெட்ஷீட் எல்லாம் எடுத்துக்கொண்டு அவர் பேசுவதை கேட்க கிளம்பிவிடுகிறீர்கள். உண்மையான குருவை நீங்கள் தேடிப் போக வேண்டாம். அவரே உங்களைத் தேடி வருவார். தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்துவிட்டு வருபவர் ஆன்மீக குரு கிடையாது. உண்மையான குரு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவேமாட்டார். தியானம் பண்றதுக்கு நீங்க அவ்ளோ காஞ்சுபோயா இருக்கீங்க? தியானம்தான் இந்த உலகத்திலேயே எளிமையான விஷயம். உலகத்தில் இருக்கும் எல்லா மதமும் போதிக்கிறது கடவுள் நமக்குள் இருக்கிறார் என்பதுதான். இருப்பதிலேயே எளிமையானது புத்தர் சொல்லும் வழிதான்.
நீங்கள் மூச்சு விடுவதை மட்டுமே கவனித்தபடி இருங்கள். வேறு எந்த சிந்தனை வந்தாலும் அதை தவிர்க்க முயற்சி செய்யாதீர்கள். இதை தொடர்ந்து செய்யும்போது தேவையில்லாத சிந்தனைகள் எல்லாம் நின்றுவிடும் .இதைதான் புத்தர் சொல்கிறார். நீச்சல் அடிக்க அடிக்கத்தான் ஒரு நாள் நீச்சல் பழகிவிடும். இதற்கு உலகத்தில் யாராவது மாற்றுக்கருத்து சொல்வதாக இருந்தால் சொல்லுங்கள். ஆனால் இதற்கு மாற்று கருத்தே கிடையாது.
View this post on Instagram