ரூ.20 லட்சம் செலவாகும் அறுவை சிகிச்சை; இலவசமாக முடித்த அரசு மருத்துவமனை: இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டு!
தனியார் மருத்துவமனையில் ரூ.20 லட்சம் பொருட்செலவில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சையை இலவசமாக செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
தனியார் மருத்துவமனையில் ரூ.20 லட்சம் பொருட்செலவில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சையை இலவசமாக செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே மாமனிதன்[2] என ஏழு படங்களை இயக்கியுள்ளார். இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் ஆகிய இரு படங்களும் வெளியாவதற்கு தயார் நிலையில் உள்ளது.
யதார்த்த வாழ்வியலின் வெளிகளில் கதைகளை பிரதிபலிக்கும் இயக்குநர் சீனுராமசாமியின் முதல் படமான கூடல்நகர் 2007ம் ஆண்டு வெளியானது பரத், சந்தியா, பாவனா மற்றும் பலர் இதில் நடித்திருந்தார்கள் வெகுஜன மக்களின் பாராட்டையும் விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்று தந்தது. பின்பு தாய் மற்றும் மகன் உறவுகளின் அடிப்படையில் இயக்கிய இவருடைய இரண்டாவது படம் தென்மேற்கு பருவக்காற்று 2010ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படம் தமிழுக்காக தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் இயக்குநர் சீனுராமசாமி தன்னுடைய முதல் தேசிய விருதை பெற்றார்.
இவர் இயக்கிய படங்களில், தர்மதுரை திரைப்படம் மருத்துவர்கள் கிராமத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் பேசியிருக்கும்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் ரூ.20 லட்சம் பொருட்செலவில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சையை இலவசமாக செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "மக்கள் மருத்துவர் டாக்டர் @AnandNodalதிரு, @RAKRI1 அவர்களுக்கும் மற்றும் குழுவினருக்கும் அன்பு வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மருத்துவர் ஆனந்த குமாரின் ட்வீட்டை ரீட்வீட் செய்து சீனு ராமசாமி தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.
மருத்துவர் ஆனந்த குமார் தனது ட்வீட்டில், "Dr பல மருத்துவரை பார்த்துட்டேன்! பல மருத்துவமனை போயிட்டு வந்துட்டேன்!
என் மனைவிய காப்பாற்ற என்கிட்ட பணம் இல்ல!ஓமந்தூரார் போங்க..காப்பாத்துவாங்கன்னு Stanley GHல சொன்னாங்க!
உயிர காப்பாற்றி குடுங்க Dr” அப்படி ஒரு சிகிச்சை செய்து காப்பாற்றும் மனநிறைவு இருக்கே.." என்று பதிவிட்டிருந்தார்.
இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மூளையில் ஒரு ரத்த நாள வீக்கம் என்றாலே ஆபத்து. அதிலும் ஒரு பெண்ணுக்கு மூன்று. எது எப்போது வெடித்து பாதிப்பு ஏற்படுத்தும் என்பதே தெரியாது.
அதனை ஒரே சமயத்தில் சரி செய்வது என்பது இதுவரை யாரும் சாதித்ததில்லை. 8 வருடங்களாக பல அரிய சிகிச்சைகளை நம் மருத்துவமனையிலேயே செய்த அனுபவ மருத்துவக் குழு, அரசும் அதிகாரிகளும் தந்த தொடர் ஆதரவு, ஊக்கம் இன்று ஒரு மருத்துவ சாதனை செய்து ஒரு பெண்ணின் உயிரிஅ தக்க நேரத்தில் காப்பாற்றி உள்ளது.
20 லட்சம் செலவாகும் சிகிச்சை. அரசு காப்பீட்டின் உதவியோடு இலவசமாக இவருக்கு செய்து கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மனநிறைவு. அரசு சுகாதாரத்துறையின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் பயன் இந்த நோயர் குணமடைந்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது/