TTF Vasan Accident: ‘பொதுமக்கள் கொல்லப்பட்டால் என்ன செய்வது?' .. TTF வாசனை கண்டித்த லியோ பட பிரபலம்..!
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் பைக் விபத்தில் காயமடைந்த நிலையில் திரைத்துறையில் இருந்து எதிர்ப்புகள் எழ தொடங்கியுள்ளது.
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் பைக் விபத்தில் காயமடைந்த நிலையில் திரைத்துறையில் இருந்து எதிர்ப்புகள் எழ தொடங்கியுள்ளது.
Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த TTF வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து வருவேதே இவரது பொழுதுபோக்காக உள்ளது. மேலும் அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இவருக்கு யூட்யூபில் 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்கள் இருக்கும் நிலையில், சமீபகாலமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இப்படியான நிலையில் மஞ்சள் வீரன் என்னும் படத்தின் ஹீரோவாகவும் TTF வாசன் நடிக்கிறார். செல்அம் இயக்கி வரும் இப்படத்தின் முன்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படியான நிலையில் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சர்வீஸ் சாலை ஒன்றில் வீலிங் செய்ய முயன்றார்.
அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்ததால் பைக் சில அடி தூரம் சாலையில் பறந்து சென்றது. இதில், TTF வாசன் சாலையோரம் இருந்த புதரில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதில் அவருக்கு கையில் எலும்புமுறிவு ஏற்பட்டதோடு ஆங்காங்கே சிறு சிறு காயங்களும் ஏற்பட்ட நிலையில் உடனடியாக காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இப்படியான வழக்கம்போல TTF வாசனுக்கு என்ன ஆனதோ என அவரது ரசிகர்கள் பதற்றத்தில் உள்ள நிலையில், மறுபக்கம் பைக் சாகசம் உள்ளிட்டவற்றை செய்து இளைஞர்களை ஆபத்தான பாதைக்கு அழைக்கிறார் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அவரது டிரைவிங் லைசன்ஸை கேன்சல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ட்விட்டரில் TTF வாசன் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இளம் இயக்குநரும், நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் வசனக்கர்த்தாவுமான ரத்னகுமார், TTF வாசன் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “தயவுசெய்து இந்த மாதிரியான பயங்கரமான பைக் ஸ்டண்ட்களை ஊக்குவிக்க வேண்டாம். நீங்கள் அவ்வளவு ஆர்வமாக இருந்தால் ரேஸ் டிராக்கில் அதனை செய்யுங்கள். உங்கள் மலிவான துணிச்சலை காட்ட இப்படி செய்யும்போது பொதுமக்கள் கொல்லப்பட்டால் என்ன செய்வது?”என கேள்வியெழுப்பியதோடு விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: TTF Vasan Accident: மவுசு காட்ட நினைத்து மாவுக்கட்டு வாங்கிய டிடிஎஃப் வாசன் - வெளியான பகீர் வீடியோ