''ஹாஸ்பிடல் பெட்ல இருந்தார்.. ஆனாலும் கதை கேட்டார் அஜித்'' இயக்குநர் ராஜகுமாரன் பகிர்ந்த சீக்ரெட்
”நல்லா டிரஸ் பண்ணா என்னிடம் வந்து எம்.ஜி,ஆர் போல இருக்கேனானு கேட்பாரு. நான் இல்லை சார் அஜித் போலத்தான் இருக்கீங்கன்னு சொல்லுவேன் “
தமிழ் சினிமாவில் நீ வருவாய் என , விண்ணுக்கும் மண்ணுக்கும் , காதலுடன் என பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் ராஜகுமாரன் . இவர் தனது படத்தில் நடித்த நடிகையான தேவையாணியை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். ராஜகுமார் இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் அஜித்துடன் பணியாற்றிய திரைப்படம்தான் நீ வருவாய் என , இந்த படத்தில் குறைவான நாட்களில் மட்டுமே அஜித்துடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருந்தாலு , அவரை எல்லா நேர்காணலிலும் தனது நண்பர் என்றே கூறுவார் ராஜகுமாரன். அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் , இருவருக்கும் இருக்கும் நட்பு குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.
அதில் "நண்பர்னு அஜித் சாரை சொல்ல முடியாது. அவருடைய கெரியர்ல எனக்காக சில நாட்களை ஒதுக்கி படம் பண்ணுறதுக்காக கொடுத்திருக்காரு.நான் அவரை நண்பர்னு சொல்லக்கூடாது . ஆனால் எல்லா இடங்களிலும் நண்பர்னுதான் அடையாளப்படுத்துவேன். காரணம் அவர் 15 நாட்கள் மட்டுமே எனக்கு டேட்ஸ் கொடுத்திருந்தாலும் , அவர் அவ்வளவு அன்பா, பிரியமா என்னிடம் பழகினார்.அதுதான் அதற்கு காரணம். அவருடைய வளர்ச்சியில என்னுடைய பங்கு எதுவுமே கிடையாது. ஆனால் நண்பர் என சொல்லு அளவிற்கு ஒரு பிணைப்பை அவர் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.
அவர் எல்லாரிடமும் அப்படித்தான். அவர் தன்னை குறைத்துக்கொண்டு எல்லோரிடமும் பழகுவார். அவர் ஸ்டாரா யாரிடமும் பழகியது கிடையாது. தண்ணீர் மாதிரிதான் அஜித். இடத்திற்கு ஏற்ற மாதிரியாக தனது குணங்களை மாற்றிக்கொள்வார்.அஜித் சார் எப்போதுமே நல்ல மனநிலையில்தான் இருப்பாரு. நீ வருவாய் என படத்தின் கதையை கூறுவதற்காக என்னை சூப்பர் குட் ஃபிலிம்ஸில் இருந்து அஜித் சார் ஆஃபிஸுக்கு அனுப்பினாங்க. அங்க போனதும் நிக் ஆர்ட் சக்கரவர்த்தி சாரிடம் கதை சொல்ல சொன்னாங்க. அவர் கதை சொல்லு பொழுதே அத்தனை போன் கால் , தலைவலினு வேற சொல்லிட்டு கதை இன்னொரு நாள் கேட்குறேன்னு சொல்லிட்டாரு. என்ன சார் கதையே சொல்ல ஆரமிக்கவில்லை அதற்குள் தலைவலினு சொல்லுறீங்கன்னு சொல்லிட்டு வந்து, சௌத்ரி சார்கிட்ட சொன்னேன்.
மளிகை கடைக்காரர் மாதிரி ஒருத்தர் இருக்காரு , அவர்கிட்ட போய் கதையை சொல்ல சொல்லுறீங்களேன்னு கேட்டேன் .அஜித் சார் அப்போ அப்பலோ மருத்துவமனையில சிகிச்சையில இருந்தாரு. அங்க போய் முழு கதையையும் சொன்னேன். படுத்த படுக்கையிலேயே கதை கேட்டாரு. பார்த்திபன் சார், ரமேஷ் கண்ணா சீன் வரும் பொழுதெல்லாம் செமயா சிரிச்சாரு. தன்னுடைய கஷ்டத்தை யாரிடமும் காட்டாத மனிதர். நல்லா டிரஸ் பண்ணா என்னிடம் வந்து எம்.ஜி,ஆர் போல இருக்கேனானு கேட்பாரு. நான் இல்லை சார் அஜித் போலத்தான் இருக்கீங்கன்னு சொல்லுவேன் “ என அஜித்துடனான தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார் இயக்குநர் ராஜகுமாரன்.