துருவ் விக்ரம் மக்கள்கிட்ட போய்சேர முடியாது..விக்ரம் குடும்பத்தின் மேல் வன்மத்தை கக்கிய இயக்குநர் ராஜகுமாரன்
இயக்குநர் ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் துருவ் விக்ரம் மற்றும் விக்ரம் பற்றி பேசியுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன

சமீப காலங்களில் பிரபலங்களைப் பற்றி தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார் நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன். அண்மையில் கமல் ஒன்றும் அவ்வளவு பெரிய நடிகர் இல்லை என்றும் இயக்குநர் மகேந்திரன் பற்றி கருத்து சொல்லி ரசிகர்களால் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானார். தற்போது நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் பற்றி பேட்டி ஒன்றில் மீண்டும் சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார்
நீ வருவாய் என , விண்ணுக்கும் மண்ணுக்கும் , காதலுடன் , திருமதி தமிழ் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜகுமாரன். சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் , விஜய் மில்டன் இயக்கிய கடுகு ஆகிய படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். அண்மையில் கமல் பற்றி பேசுகையில் " கமல் நடித்த ஒரு சில படங்களே நல்ல படங்கள் மற்றபடி அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய நடிகர் இல்லை" நிறைய படங்களை இயக்கிய ராமநாராயணனை விட்டுவிட்டு ஒரு சில படங்களை இயக்கிய இயக்குநர் மகேந்திரனை கொண்டாடுகிறார்கள். " என அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் கமல் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு பின் தனது கருத்து குறிதுத் விளக்கமளித்தார். தற்போது நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் குறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
துருவ் விக்ரம் மக்களிடம் சென்று சேர முடியாது
"துருவ் விக்ரம் விண்ணுக்கும் மண்ணுக்கும் மாதிரியான படங்களில் நடிக்கவில்லை என்றால் அவரால் மக்களிடம் சென்று சேர முடியாது . சினிமா என்பது நிறைய மாயாஜாலமும் அற்புதமும் அடங்கிய ஒரு விஷயம் . அதுக்கு நிறைய அடிப்படையான விஷயங்கள் இருக்கு. முதலில் சினிமானா என்னனு தெரிஞ்சுக்கனும்' என துருவ் விக்ரம் பற்றி ராஜகுமாரன் பேசியுள்ளார்
விக்ரமுக்கு நடிக்க தெரியாது
விக்ரம் பற்றி பேசுகையில் " சேது படம் வந்தபிறகு தான் விக்ரம் என்கிற ஒரு நடிகை நிறைய பேருக்கு அடையாளம் தெரியும் அதற்கு முன்னாள் இவர் அத்தனை படங்கள் நடித்தும் யாருக்கும் தெரியாது. அப்போ நீ நடிக்கவில்லை என்று தானே அர்த்தம். விக்ரமுக்கு ஒன்று ரஜினி மாதிரி நடிக்க தெரியும் இல்லையென்றால் கமல் மாதிரி நடிக்க தெரியும். தன்னை ஒரு நடிகனாக எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது என விக்ரமுக்கு தெரியவில்லை. சேது படத்திற்கு பின் தான் விக்ரம் தன்னுடைய பாதையை கண்டுபிடித்தார். அதுவும் முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு கையை திருப்பிக் கொண்டு நடித்தால் நடிகன் என்று நம்பிவிடுவார்கள் என நடித்தார். என்னுடைய விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தின் போது தான் விக்ரமுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. " என விக்ரம் பற்றி பல்வேறு கருத்துக்களை அவர் பேசியுள்ளார்.





















