மேலும் அறிய

Director Rajkapoor | போலீஸ் பின்னால் வர வேண்டும் என்பதற்காக இயக்குநர் ஆன ராஜ்கபூர்!

ராஜ்கபூருக்கு எப்போதுமே விஜய்காந்தை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால்

தமிழ் சினிமாவில் நடிகர் ராஜ்கபூரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 90 களில் வாந்த பல இளைஞர்களை தனது படங்கள் மூலமாக காட்டி இழுத்தவர். தற்போது பல படங்களில் வில்லனாகவும் , குணச்சித்திர கதாபாத்திரத்திலும் மிரட்டி வருகிறார் ராஜ் கபூர். சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் வெளியான நந்தினி சீரியலின் இயக்குநரும் இவர்தான். ராஜ் கபூர் ஒரு தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகர். ஆரம்ப காலத்தில் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையில் அதற்கான முயற்சிகளை எடுத்து வெற்றியும் கண்டுள்ளார். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் காவல்துறை அதிகாரியாக தேர்வான அவர் , காவல்துறையை நம் பின்னால் வர வைக்க வேண்டும் என்றால் அதற்கு அரசியல்வாதி ஆக வேண்டும் அல்லது  சினிமாக்காரனாக வேண்டும் என நினைத்துதான் இயக்குநராக மாற சென்னையை முகாமிட்டுள்ளார்.


Director Rajkapoor | போலீஸ் பின்னால் வர வேண்டும் என்பதற்காக இயக்குநர் ஆன ராஜ்கபூர்!
நியூ காலேஜில் சேர்ந்த அவர் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறையில் பயணம் செய்ய தொடங்கியிருக்கிறார். முதன் முதலாக இயக்குநர் ஸ்ரீதர் அவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர் . அதன் பிறகு நடிகர் வாசு - பாரதி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். 1991 ஆம் ஆண்டு வெளியான தாலாட்டு  கேக்குதம்மா படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தார் . அந்த படத்தில் பிரபு மற்றும் கனகா நடித்திருந்தனர். படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை . காரணம் அதே ஆண்டில்தான் சின்னத்தம்பி படமும் வெளியானது, ஒரு தாலியை வைத்துக்கொண்டு மொத்த கதையும் நகர்கிறது ... சின்னத்தம்பி படம் இப்படியான வெற்றியை பதிவு செய்ய போகிறது என அப்போது எதிர்பார்க்காவில்லை என தெரிவிக்கிறார் ராஜ் கபூர்.


Director Rajkapoor | போலீஸ் பின்னால் வர வேண்டும் என்பதற்காக இயக்குநர் ஆன ராஜ்கபூர்!

ராஜ் கபூர் அடுத்தடுத்து நிறைய படங்களை இயக்கியிருந்தாலும் இந்த கால தலைமுறைக்கும் பிடித்த மாதிரியான படங்கள் ஏராளம் . அவற்றுள் அவள் வருவாளா , ஆனந்த பூங்காற்று , வள்ளல், சுதந்திரம் உள்ளிட படங்களும் அடங்கும். அந்த காலத்து டாப் நடிகர்களான பிரபு , கார்த்திக், முரளி உள்ளிட்டவர்களை வைத்து படம் எடுத்தாலும் ராஜ் கபூருக்கு எப்போதுமே விஜய்காந்தை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால் அது இறுதி வரையில் நடக்கவில்லை என வருந்தும்  இயக்குநர் ராஜ் கபூர், அவருடன் நடித்த அனுபவங்கள் அதற்கான ஏக்கத்தை குறைத்தது என்கிறார். ராஜ்கபூருக்கு ஷாருக் கபூர் என்ற மகன் இருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மெக்கா புனித யாத்திரைக்காக சவுதி அரேபியா சென்ற அவர் , கடுமையான சளி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி அந்த நாட்டிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Embed widget