Praveeen Gandhi | ‛நான் நடிகரானதும் பெரிய நடிகர்கள் என்னை ஒதுக்க ஆரம்பித்துவிட்டார்கள்...’ -மனம் திறக்கும் இயக்குநர் பிரவீன் காந்தி!
என்னுடைய 23 வயதில் 1997ஆம் ஆண்டு முதல் படமான ரட்சகன் படத்தை இயக்கியதாகவும், அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படம் என பெருமைக்கொள்கிறார் இயக்குநர் பிரவீன் காந்தி.
என் கதைக்கான ரசிகர்கள் இப்போது தான் இருக்கிறார்கள் என்பதால் ,பிஸியாக இருக்க வேண்டிய நேரம் இது தான் என மனம் திறக்கிறார் இயக்குநர் பிரவீன் காந்தி.
தமிழ்சினிமாவில் பல முன்னணி இயக்குநர்கள் பல்வேறு திரைப்படங்களை இயக்கியதோடு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் சில இயக்குநர்கள் குறைவான படம் இயக்கி இருந்தப்போதும் இன்றளவும் அப்படங்கள் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அந்தளவிற்கு தன்னுடைய கதையை இயக்கியதோடு பார்வையாளர்களின் மனதை வெகுவாக கவர்ந்திருப்பார்கள். அந்தவரிசையில் ஒருவர் தான் ரட்சகன், துள்ளல், ஸ்டார், ஜோடி, புலிப்பார்வை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் பிரவீன் காந்தி, என்னுடைய 23 வயதில் 1997ஆம் ஆண்டு முதல் படமான ரட்சகன் படத்தை இயக்கியதாகவும், அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படம் என பெருமைக்கொள்கிறார். குறிப்பாக இப்படத்தில் ரூபாய் 80 லட்ச வரை CG செலவு மட்டும் செலவானது என பெருமையுடன் தெரிவித்திருந்தார்.
மேலும் என்னுடைய படங்கள் முழுவதிலும் எவ்வித லேக்கும் இருக்காது எனவும், படத்தில் அடுத்து அடுத்து என்ன நடக்கப்போகிறது? என பார்வையாளர்கள் யோசிக்க வைப்பதோடு போர் அடிக்கிறது என்ற எவ்வித கருத்தையும் மக்கள் முன்வைக்க மாட்டார்கள். அந்தளவிற்கு என்னுடைய கதைக்களம் விறுவிறுப்பாக அமைந்திருக்கிறது என தெரிவிக்கும் பிரவீன் காந்தி, நான் பிஸியான இயக்குநராக இருப்பதற்கான நேரம் இது தான் எனவும் எனக்காக ரசிகர்கள் இப்போது தான் இருக்கிறார்கள் என பெருமையுடன் கூறியுள்ளார்.
ஒரு முறை சன்டிவி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்தப்போது நீங்கள் நடிகர் கார்த்திக் போன்று இருக்கிறீர்கள் என அவர் இயக்குநர் அகத்தியன் தெரிவித்தது தான் என்னுடைய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நான் வருவதற்கு காரணம் என தெரிவித்துள்ளார். ஆனால் என்னை பிடிக்காதவர்கள் , “இவரும் நடிச்சு படத்த கெடுத்துவாருன்னு“ சொன்னதுனால பல பிரச்சனைகளை சந்தித்ததாகவும், குறிப்பாக நான் பார்த்த வரைக்கும் சினிமா துறையில் பெரிய வளர்ச்சி யாருக்கும் பிடிக்காது, எப்படா தப்பு செய்வார்னு பார்த்திட்டு இருப்பார்கள் என விமர்சனம் செய்தார்.
மேலும் இதுப்போன்ற பிரச்சனைகளால் தான் எனக்கும், நடிகர் பிரசாந்த்க்கும் ஸ்டார் படத்தில் பிரச்சனை வந்தது எனவும் தெரிவித்துள்ளார். இதோடு மட்டுமின்றி ஒரு முறை நடிகர் விஜய் என்னுடைய படத்தில் நடிப்பதற்கு கதை சொல்ல போனது கூட, ஏன் நீங்கள் நடிக்கவேண்டியது தானே எனவும் என்னைப்பார்த்து கேளி செய்ததையும் பேட்டியில் இயக்குநர் பிரவீன் காந்தி பகிர்ந்துள்ளார். மேலும் இப்போது தான் படத்தை இயக்கி இருந்தால் நான் அனைவருக்கும் விருப்பமான இயக்குநராக இருந்திருப்பேன் எனவும் கூறியுள்ளார்.