மேலும் அறிய
Advertisement
Vijayakanth: நாற்காலியில் இருந்து சரிந்து விழப்போன விஜயகாந்த்: “பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு” : கலங்கிய பிரபலம்..
Vijayakanth: கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள்..
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்தை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீங்க...அவரை இப்படி பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு என இயக்குநர் பாண்டிராஜ் கூறியுள்ளார்.
சென்னை திருவேற்காட்டில் தேமுதிக கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்தை கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் பார்த்ததால், உற்சாகமடைந்து அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்வதாக அறிவிக்கபப்ட்டது. அப்போது விஜயகாந்தின் காலில் விழுந்து ஆசிபெற்ற பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பேசிக் கொண்டிருக்கும்போது நாற்காலியில் அமர்ந்திருந்த விஜயகாந்த் முன்பகமாக சரிந்து விழப்பார்த்தார். அப்போது அவரது அருகில் அமர்ந்திருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்தை விழாதவாறு தாங்கி பிடித்தனர். விஜயகாந்த் சரிந்து விழப்போன வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் அதிர்ச்சி அளித்தனர்.
இந்த நிலையில் விஜயகாந்தின் வீடியோவை பார்த்த இயக்குநர் பாண்டிராஜ் தனது வேதனையை டிவிட்டர் பதிவு மூலம் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் please ...பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘ இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு” என பதிவிட்டுள்ளார்.
கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு ,
— Pandiraj (@pandiraj_dir) December 14, 2023
இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை
அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் please ...🙏
பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘
இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு 😭🙏 https://t.co/roZTHx7btB
அண்மையில் உடல்நல குறைவால் பொதுவெளியில் வராமல் ஓய்வில் இருக்கும் விஜயகாந்த் கடந்த மாதம் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பதாகவும், உடல்நிலை சீராக தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பிரேமலதா வெளியிட்டு யாரும் தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
மேலும்படிக்க: Watch Video : பஞ்சுமிட்டாய் சேல கட்டி.. மீண்டும் நெப்போலியன் - குஷ்பு.. ஹார்டின்களை அள்ளிவிட்ட ரசிகர்கள்..
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion