HBD Pa. Ranjith: அட்டக்கத்தியின் அறிமுகக் கலைஞன்: தமிழ் சினிமாவை தனக்கென உருவாக்கும் பா.ரஞ்சித்துக்கு பிறந்தநாள்!
தமிழ் சினிமாவின் தனித்துமான இயக்குனர்களில் ஒருவரான பா. ரஞ்சித் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல அதன் மூலம் சமுதாயத்தில் மக்களுக்கு நடக்கும் அவலங்கள், அரசியல் மட்டுமின்றி வெளிப்படையாக பேச தயங்கும் விஷயங்களையும் துணிச்சலாக சமூக அக்கறையோடு படம் எடுக்கும் வெகு சில இயக்குனர்களில் முன்னணி வகிக்கும் பா. ரஞ்சித்தின் 40 வது பிறந்தநாள் இன்று. ஹேப்பி பர்த்டே இயக்குனரே !!!
அறிமுகமே அட்டகாசம் :
அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இந்த கலைஞன் உதவி இயக்குனராக வெங்கட் பிரபுவிடம் பணியாற்றியவர். தனது முதல் படத்திலேயே மிகவும் வித்தியாசமான திரைக்கதையோடு ரசிகர்களை யார்டா இது என திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர். மிகவும் ஜாலியான ஒரு இயக்குனரான வெங்கட் பிரபுவின் பட்டறையில் இருந்து வந்த இந்த இயக்குனர் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் படங்களை கொண்டு வருவதில் தேர்ந்தவராக இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Few Hours to Go For #PaRa Birthday💙💙#HBDPARanjith | @beemji | @Neelam_Culture pic.twitter.com/nMrH8dXxos
— Pa Ranjith FC (@paranjithfc) December 7, 2022
நம்பிக்கை விதை :
பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, சர்பட்டா பரம்பரை, காலா, நட்சத்திரம் நகர்கிறது என அவரின் படங்கள் அனைத்திலுமே மக்களின் தேவைகளை பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் சினிமா மூலம் காட்சிப்படுத்துவதால் நிச்சயம் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை விதைத்த வித்தகர்.
சாமானிய மக்களின் இயக்குனர் :
வழக்கமாக தமிழ் சினிமாவில் இருக்கும் காமெடி, அதிரடி, ஆக்சன், ரொமான்ஸ் மட்டுமே இல்லாமல் சாமானிய மக்களுக்கு போய் சேரும் வகையில் அழுத்தமான ஒரு திரைக்கதையை மண் மனம் மாறாமல் அவர்களின் தினசரி வாழ்வியலையும், கலாச்சாரத்தையும் கலந்து எடுத்து செல்வது சிறப்பு. நமது தமிழ் சினிமாவை அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் இயக்குனர் பா. ரஞ்சித்.
There exist a set of Filmmakers with a firm motive to tell the stories of the harsh realities which society wailed on them in their life, they'll try to depict those on-screen with sheer earnestness, Pa. Ranjith belongs to that "look up to" niche.#HBDPaRanjith pic.twitter.com/kgbFRtXsgW
— Raj Shekar (@RajShekar4463) December 8, 2021
18 ஆம் நூற்றாண்டுக்கு நமது பயணம் :
இந்த மகா கலைஞன் அடுத்ததாக நடிகர் விக்ரமுடன் இணைந்து பணியாற்றி வரும் திரைப்படம் தங்கலான். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படம் 18 ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பா. ரஞ்சித்தின் பஞ்ச் நிச்சயமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தனித்துவமான இயக்குனர் பா. ரஞ்சித்திடம் இருந்து மேலும் பல அற்புதமான ஆழமான படைப்புக்களை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
ஒன்ஸ் மோர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பா. ரஞ்சித் !!!