Kalki 2898AD: அந்த ஹாலிவுட் படத்தோடு ஒப்பிடாதீங்க... கமல் - பிரபாஸ் இணையும் கல்கி பட இயக்குநர் காட்டம்!
Kalki 2898AD: பிரபாஸ் நடித்து வரும் ‘கல்கி 2898’ படத்தை ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டுப் பேசும் நெட்டிசன்களுக்கு பதிலளித்துள்ளார் நாக் அஸ்வின்.
கல்கி 2898
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் கல்கி 2898AD (Kalki 2898AD). அமிதாப் பச்சன், ராணா டகுபதி, தீபிகா படூகோன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து கமல்ஹாசன் இப்படத்தில் வில்லன் ரோல் ஏற்று நடித்துள்ளார். சந்தோஷ் நாராயாணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சுமார் 600 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக புராணம் மற்றும் சைன்ஸ் ஃபிக்ஷனாக உருவாகி வருகிறது இப்படம்.
ஹாலிவுட் படத்துடன் ஒப்பிட்டு பேசும் நெட்டிசன்கள்
கல்கி 2898 படத்தின் போஸ்டர்களை தொடர்ச்சியாக படக்குழு வெளியிட்டு வருகிறது. முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது ரசிகர்கள் அதைக் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளில் கடும் கவனம் செலுத்தி வருகிறார்கள் படக்குழுவினர்.
சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. இதனுடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்தது. வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
#Kalki2898AD Nizam by Global Cinemas. A Solo Release assured in almost all single screens.
— Prabhas Fan (@ivdsai) April 28, 2024
Grand release on June 27th#Kalki2898ADonJune27 #Prabhas pic.twitter.com/tvFiyZMlMY
கல்கி படத்தின் போஸ்டர்கள் பார்ப்பதற்கு ஹாலிவுட்டில் வெளியான சைன்ஸ் ஃபிக்ஷன் படமான டியூன் படத்தை நினைவு படுத்துவதாக சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்துள்ளார் படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின். அவர் கூறியதாவது:
#Kalki2898AD Unofficially Pre-production started in 2019
— CineCorn.Com By YoungMantra (@cinecorndotcom) April 28, 2024
Dune Released in Last quarter of 2021
These People Are At It Again, Spreding Baseless Rumours https://t.co/J7S2uzDAAI
கல்கி படத்தின் போஸ்டரில் மணல் இருப்பதால் அதை உடனே டியூன் படத்தோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். இந்தப் படத்தை பல ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டுப் பேசுவதற்கு காரணம் எங்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் விடாப்பிடியாக உழைத்து படத்தின் தரத்தை மேம்படுத்தி இருக்கிறார்கள். படத்தின் வி.எஃப் .எக்ஸ் காட்சிகளில் எந்த விதமான குறையும் இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்” என்றார்.
முன்னதாக ஹாலிவுட்டில் வெளியான ஸ்டார் ட்ரெக் போன்ற படங்களின் மேல் தனக்கு அதிக ஈர்ப்பு இருந்து இருப்பதாகவும். அப்படியான ஒரு படத்தை இந்திய புராணக் கதையை மையப்படுத்தி எடுக்க வேண்டும் என்கிற ஆசை தனக்கு எப்போது இருந்துள்ளதாகவும் நாக் அஸ்வின் கூறியுள்ளார்”