மேலும் அறிய

Lokesh Kanagaraj on kamal: “கமல் சார்கிட்ட ஆட்டோகிராப் வாங்கணும்னு நெனச்சிருக்கேன்; ஆனால்” - சுவாரஸ்ய கதையை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்..!

கமலின் மிகத் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவரை வைத்து தற்போது இயக்கி இருக்கும் திரைப்படம்  ‘விக்ரம்’. இந்தப்படத்தின் ப்ரோமோஷனுக்கான நேர்காணல் ஒன்றில் அவர் இந்த அனுபவம் குறித்து பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலை முதலில் சந்தித்த அனுபவம் குறித்தும், அவரிடம் முதலில் ஆட்டோகிராப் வாங்கிய அனுபவம் குறித்தும் பேசியிருக்கிறார்.

கமலின் மிகத்தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவரை வைத்து தற்போது இயக்கி இருக்கும் திரைப்படம்  ‘விக்ரம்’. இந்தப்படத்தின் ப்ரோமோஷனுக்கான நேர்காணல் ஒன்றில் அவர் இந்த அனுபவம் குறித்து பேசியிருக்கிறார்.

கை காலே ஓடல.

அதில், “மாநகரம் படம் மார்ச் 10 ரிலீஸ் ஆச்சு. மார்ச் 14 எனக்கு பிறந்தநாள். அன்னைக்கு என்னோட ஃப்ரண்ட், ஜட்ஜ் ஒருத்தரை மீட் பண்ணனும்னு சொல்லி என்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனான். அங்க போறவரைக்கும் எனக்குத் தெரியாது அது கமல் சாரோட வீடுனு. அங்க இருக்குற போட்டோவை வச்சுதான் கடைசில கண்டுபிடிச்சேன். அத ரியலைஸ் பண்ணி முடிக்கிறதுக்குள்ள கமல் சார் வந்துட்டார். அவரை பார்த்த 10 நிமிஷம் எனக்கு பேச்சே வரல.

 

அதுக்கப்புறமா விக்ரம் படம் கமிட் ஆகி படம் பண்றோம் முடிவான போது பார்த்து பேசினோம். அதுக்கப்புறமா படம் சைன் பண்றதுக்காக இந்தியன் 2 செட்ல கமல் சாரை மீட் பண்ண போயிருந்தேன். அப்ப கமல் சார் இந்தியன் 2 மேக்கப்ல இருந்தாரு. அவர் வந்ததும் எனக்கு கை காலே ஓடல. அவர் ப்ரோடியுசர் பேருக்கு கீழே சைன் பண்ணாரு. நான் டைரக்டர் பேரு கீழே சைன் பண்ணேன். அவர் கிட்ட ஆட்டோகிராப் வாங்கனும்ணு ஆசைப்பட்டுருக்கேன். ஆனா இப்படி ஆட்டோகிராப்  வாங்குவேன்ணு நினைக்கல.” என்று பேசினார்.

தனித்துவமான திரைக்கதை 

மாநகரம் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனது அழுத்தமான திரைக்கதை மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார். தொடர்ந்து கார்த்தியுடன் கைகோர்த்த லோகேஷ் கைதி படத்தை இயக்கினார். ஆக்‌ஷன் படமாக உருவாகியிருந்த இந்தப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை இயக்கிக்கொண்டிருந்த போதே, அவருக்கு விஜய்க்கு கதை சொல்ல வாய்ப்பு  கிடைத்த நிலையில், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட லோகேஷ்  ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். 

கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தனது தனித்துவமான திரைக்கதையால் பல முன்னணி இயக்குநர்களின் பாராட்டைப் பெற்ற லோகேஷூக்கு தொடர்ந்து கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப்படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.   

 

 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget