மேலும் அறிய

HBD Lokesh Kanagaraj: "6 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி” .. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் இன்று..!

மக்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு சினிமாவில் எளிதில் சாதனைப் படைப்பவர்கள் வெகு சிலரே. அவற்றில் தற்கால தலைமுறைகளின் இயக்குநராக லோகேஷ் கனகராஜ் உள்ளார்.

தமிழ் சினிமாவின் இளம் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

பொதுவாக சினிமா மோகம் இருப்பவர்கள் சமூகத்தில் இருந்து தங்களை தனித்து காட்டவே விரும்புவார்கள். மக்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு சினிமாவில் எளிதில் சாதனைப் படைப்பவர்கள் வெகு சிலரே. அவற்றில் தற்கால தலைமுறைகளின் இயக்குநராக லோகேஷ் கனகராஜ் உள்ளார். 2017 ஆம் ஆண்டு தொடங்கிய அவரின் சினிமா பயணம் இந்த 6 வருடத்தில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது என்றே சொல்லலாம். 

வங்கி வேலையை விட்ட லோகேஷ்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவில் பிறந்த லோகேஷ் ஒரு வங்கி ஊழியர் ஆவார்.  ஆனால் சினிமா மீது இருந்த காதலால் அது தொடர்பான ஆர்வத்தை தொடர்ந்து தனக்குள் ஏற்படுத்திக் கொண்டார். கார்ப்பரேட் குறும்படப் போட்டி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், அப்போட்டியின் நடுவராக கார்த்திக் சுப்புராஜ் இருந்தார். லோகேஷின் குறும்படத்தால் ஈர்க்கப்பட்ட கார்த்திக் சுப்புராஜ், அவரை தொடர்ந்து திரைப்படங்களை இயக்குமாறு ஊக்குவித்தார். இதனால் லோகேஷ் தனது வங்கி ஊழியர் பணியை ராஜினாமா செய்தார். 

அவியல் தொடங்கி லியோ வரை 

2016 ஆம் ஆண்டு 5 குறும்படங்கள் கொண்டு கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் “அவியல்” படம் வெளியானது. இதில் ஒன்றை லோகேஷ் கனகராஜ் இயக்கி தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரீ கொடுத்தார். இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு “மாநகரம்” படத்தை இயக்கி தமிழ் சினிமாவின் இயக்குநராக மாறினார். பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியான இப்படம் உணர்வு ரீதியாக மக்களை கவர்ந்து யார் இந்த லோகேஷ் என கவனிக்க வைத்தார். 

மாநகரம் படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் அடுத்த படம் பண்ண லோகேஷூக்கு வாய்ப்பு வழங்கியது. இம்முறை அவரது படத்தின் ஹீரோவாக கார்த்தி இருந்தார். “கைதி” என பெயரிடப்பட்ட அப்படம் 2019 ஆம் ஆண்டு தீபாவளிக்கு நடிகர் விஜய் நடித்த “பிகில்” படத்துடன் மோதியது. ஆக்‌ஷன்-த்ரில்லர் படம், முழுக்க முழுக்க இரவு கதைக்களம், படம் முழுக்க போர் அடிக்காமல் கொண்டு சென்ற விதம் என கைதி அந்த தீபாவளி ரேஸில் வென்றது. 

”மாஸ்டர்” லோகேஷ்

அப்புறம் என்ன அடுத்து லோகேஷூடன் விஜய் இணைய தமிழ் சினிமா மிரண்டு போனது. இம்முறை கொஞ்சம் அதிகமாக ஹீரோவாக விஜய்யையும், வில்லனாக விஜய் சேதுபதியையும் “மாஸ்டர்” படத்தில் இணைக்க பூஜையின் போதே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.கொரோனா காரணமாக லேட்டாக  வெளியான இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ஆனால் இது லோகேஷின் ஸ்டைல் இல்லை எனவும் பேச்சு எழுந்தது. 

வெற்றி தன் வசமானால் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். நாம் நினைத்தது கூட. லோகேஷ் பல பேட்டிகளில் கமலை பார்த்து தான் சினிமாவுக்கு வந்ததாகவும்,அவரின் மிகப்பெரிய ஃபேன் எனவும் சொல்லியுள்ளார். அப்படியா வா நாம ஒரு படம் பண்ணலாம் என “விக்ரம்” படத்தில் இருவரும் இணைந்தனர். மேக்கிங் வீடியோ, முழுக்க முழுக்க லோகேஷின் ஆக்‌ஷன் ஸ்டைல், லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU) என பல வித்தைகளை கையாண்டார். 

இதில் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ், அதாவது முந்தைய படங்களின் காட்சிகள் அல்லது கேரக்டர்களை தற்போது எடுக்கும் படங்களில் ஒன்றிணைப்பது, அவர்களை கொண்டு கதையை நகர்த்துவது என தமிழ் சினிமா இதுவரை காணாத ஒன்றை கையிலெடுத்துள்ளார். இதனால் அவரின் படங்கள் ரிலீசாக போகிறதென்றால் முந்தைய படங்கள் எல்லாம் பார்த்தால் மட்டுமே புரியும். இப்போது மீண்டும் விஜய்யுடன் “லியோ” படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் விஜய், அர்ஜூன்,சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் மேனன் என தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்தவர்களை இணைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். 

மேலே மக்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு சினிமாவில் தான் நினைத்த இடத்தை வெகு விரைவாக லோகேஷ் அடைந்து கொண்டிருக்கிறார். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லோகேஷ்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget