Ajithkumar: படம் ஓடாது என நன்றாக தெரிந்தும் நடித்த அஜித்... உண்மையைப் போட்டுடைத்த பிரபல இயக்குநர்..!
அஜித் நடித்த ஜி படத்தில் முதலில் வேறு நடிகரைத் தான் இயக்குநர் லிங்குசாமி யோசித்துள்ளார். ஆனால் கடைசியில் அந்த படம் அஜித்தை வைத்து எடுக்கப்பட வேண்டியதாகி விட்டது.
அஜித் நடித்த ஜி படத்தில் முதலில் வேறு நடிகரைத் தான் இயக்குநர் லிங்குசாமி யோசித்துள்ளார். ஆனால் கடைசியில் அந்த படம் அஜித்தை வைத்து எடுக்கப்பட வேண்டியதாகி விட்டது.
இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்துவந்த லிங்குசாமி, 2001 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் அவருக்கான சிறந்த எண்ட்ரீயாக அமைந்தது. தொடர்ந்து மாதவனை வைத்து ரன் படத்தை இயக்கினார். தொடர்ந்து தனது மூன்றாவது படத்திலேயே முன்னணி நடிகர் அஜித்துடன் ஜி படத்தில் இணைந்தார். 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் த்ரிஷா, மணிவண்ணன், வெங்கட்பிரபு, சரண் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்தார்.
பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த நிலையில், படம் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி அடைந்தது. அஜித்துக்கு கொஞ்சமும் செட் ஆகாத கேரக்டராக ஜி படம் அமைந்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் ஒரு நேர்காணல் ஒன்றில் இயக்குநர் லிங்குசாமியிடம் ஜி படத்தில் அஜித் காலேஜ் ஸ்டூடண்ட் கேரக்டர் பண்ணிருப்பாரு. அந்த ரோலுக்கு வேற யாரும் நீங்கள் முடிவு பண்ணியிருந்தீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “கண்டிப்பா அஜித் அந்த கேரக்டர் பண்ணக்கூடாது என நினைத்தேன். ஆனால் காலம் அவருடன் படம் பண்ண வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது. மாணவர் என்றால் அதன்படி இருக்க வேண்டும் இல்லையா? அதனால் அவரை யோசிக்கவே இல்லை. சித்தார்த் தான் என் சாய்ஸாக இருந்தது. அந்த மாதிரி ஒரு ஹீரோ தான் ஜி படம் பண்ண வேண்டும் என நினைத்தேன். அதை அஜித்தும் ஃபீல் செய்தார்.
அவர் என்கிட்ட கதை கேட்கல. நாளைக்கு திருவனந்தபுரத்தில் இருக்கும் கல்லூரியில் ஷூட்டிங் என்றால் முதல் நாள் தான் கதைக் கேட்டார். கேட்டு முடித்த பின்பு இந்த படம் கண்டிப்பா நல்லா வராது என சொல்லி விட்டார். நீங்க வேற எதாவது கதை யோசிங்க என சொன்னார். ஆனால் என்னுடன் இருந்தவர்கள், ‘அஜித் அப்படித்தான் சொல்லுவார். இதுக்கு முன்னாடி நம்மகிட்டேயும் நிறைய பேர் இப்படித்தான் சொன்னாங்க. நம்ம படத்தை நாம எடுப்போம். இந்த படம் நன்றாக வரும்’ என நம்பினார்கள்” என்று லிங்குசாமி கூறியுள்ளார்.
ஆனால் படம் சரியாக போகவில்லை. அதேசமயம் லிங்குசாமி இயக்கி அதே ஆண்டில் வெளியான ”சண்டகோழி” படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து லிங்குசாமியை சிறந்த கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.