Lingusamy: ‛உத்தமவில்லன் நஷ்டத்திற்கு கமல் காரணமா?’ ஓப்பனாக பேசிய லிங்குசாமி!
2014 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படமும், 2015 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் உத்தம வில்லன் படமும் வெளியாகி நஷ்டத்தை சந்தித்ததால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்க கமல்ஹாசன் தான் காரணம் என்ற கருத்தை இயக்குநர் லிங்குசாமி மறுத்துள்ளார்.
ஆனந்தம்,ரன்,சண்டகோழி,வேட்டை,பீமா படத்தின் மூலம் கமர்ஷியல் இயக்குநராக உருவான லிங்குசாமி தனது சகோதரர்களுடன் இணைந்து “திருப்பதி பிரதர்ஸ்” என்னும் நிறுவனத்தை தொடங்கி பட தயாரிப்பிலும், விநியோகத்திலும் ஈடுபட்டார். அதன்படி தீபாவளி, பட்டாளம்,பையா,கும்கி, வழக்கு எண் 18/9, இவன் வேற மாதிரி, கோலிசோடா, மஞ்சப்பை ஆகிய பல படங்களை நேரடியாகவும், பிற நிறுவனத்துடன் இணைந்தும் தயாரித்தது.
இதற்கிடையில் 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி தயாரித்து இயக்கிய அஞ்சான் படமும், 2015 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் தயாரான உத்தம வில்லன் படமும் வெளியாகி பெரும் நஷ்டத்தை சந்தித்ததால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் படம் வெளியாகாமல் இருந்தது. பல பிரச்சனைகளுக்குப் பின் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
View this post on Instagram
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்க கமல்ஹாசன் தான் காரணம் என்ற கருத்தை மறுத்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பார்வதி, ஊர்வசி, கே.பாலசந்தர் நடிப்பில் உத்தமவில்லன் வெளியானது. ஜிப்ரான் இசையமைத்திருந்த இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் தயாரித்திருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதேசமயம் இன்றைய நிலையில் பார்த்தால் படம் எல்லோருக்கும் பிடித்த படமாக உள்ளது. இந்நிலையில் அந்த நேர்காணலில் எத்தனை வருஷமா சினிமாவில் இருக்கும் கமலுடன் படம் பண்ணுவது எவ்வளவு பெரிய விஷயம். நாங்க விளையாட்டா போய் படம் தயாரிச்சிட்டு இருக்கப்ப அடுத்து என்னடா என போஸிடம் கேட்டேன். அவன் கமலோடு ஒரு படம் பண்ணனும் என சொன்னார். உத்தமவில்லன் படம் தான் எங்கள் நிறுவனம் நஷ்டப்பட காரணம்ன்னு சொல்றாங்க.
ஆனால் நான் எங்கேயுமே அப்படி பேசியதில்லை. நாமெல்லாம் கண்ணுக்கு தெரியாம அவர்கிட்ட இருந்து கத்துருக்கோம். அவரின் தேவர் மகனும், என்னுடைய சண்டகோழி படத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு. அவ்வளவு பெரிய கலைஞன்,தன்னை நம்பி வர்றவங்களுக்கு இப்படி பண்ணனும்ன்னு நினைப்பாரா?.. கமல் விரும்பி தான் செஞ்சாரு. ஆனால் உத்தமவில்லனுக்கு முன்னாடி செஞ்ச விஷயம் வேற. விக்ரம் மாதிரி ஒரு கதையை பண்ண நினைச்சாரு.
ஒரு நேரத்துக்குப் பிறகு உத்தமவில்லனா அது மாறிடுச்சி. எனக்கு அதுல துளிகூட வருத்தமில்லை. மீண்டும் நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என நினைத்துள்ளோம்.