மேலும் அறிய

Dhruva Natchathiram: 'பென்டாஸ்டிக்.. அதுவும் விநாயகன்' துருவ நட்சத்திரத்தை புகழ்ந்து தள்ளிய லிங்குசாமி!

துருவ நட்சத்திரம் படத்தை பார்த்த இயக்குநர் லிங்குசாமி படம் மிக சிறப்பாக வந்திருப்பதாக பாராட்டியுள்ளார்

துருவ நட்சத்திரம்

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா,வாரணம் ஆயிரம், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களை இயக்கிய கெளதம் மேனன் (Gautham Menon) தற்போது இயக்கி இருக்கும் படம் துருவ நட்சத்திரம் (Dhruva Natchathiram).

துருவ நட்சத்திரம்:

விக்ரம், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், விநாயகன், ஆர்.பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடித்து  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நவம்பர் 24ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கத்தில் வெளியாக இருக்கிறது. 6 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தை கடந்த 8 மாதங்கள் கடின உழைப்பால் பல்வேறு தரப்பினருடன் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் கெளதம் மேனன்

படம் பழசாகிடுச்சுனு நினைக்கிறாங்க.

துருவ நட்சத்திரம் படத்திற்கு இருக்கு மிகப்பெரிய சிக்கலை விளக்கியுள்ளார் கெளதம் மேனன்.  “ஏற்கனவே பல வருடங்கள் கிடப்பில் இருந்ததால் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுவதற்கு விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். கூடுதலாக படத்தின் மீது கோர்ட்டில் வழக்கு இருக்கிறதோ என்கிற சந்தேகம் அவர்களுக்கு இருக்கிறது.

இதன் காரணத்தினால் நான் தனிப்பட்ட முறையில் தெலுங்கு மற்றும் கன்னட வெளியீட்டிற்காக பல தரப்பு விநியோகஸ்தர்களிடம் பேசி படத்தின் மீது இருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு விட்டன என்பதை உறுதிப்படுத்தி வருகிறேன்.  நீங்கள் நம்பாமல் கூட போகலாம், ஆனால் என்னுடைய படம் பல வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டாலும் ஏதோ போன வாரம் படப்பிடிப்பு முடிந்தது போல் பார்க்க புதிதாக இருக்கிறது. அதனுடைய கதை எந்த வகையிலும் பழசாகிவிடவில்லை. இந்தப் படத்தை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்காக திரையிட்டு படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்” என்று அவர் கூறியிருந்தார்

படத்தைப் பாராட்டிய லிங்குசாமி

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தைப் பார்த்த இயக்குநர் லிங்குசாமி படத்தைப் பாராட்டியிருப்பது படத்தின் மீதான அபிப்ராயத்தை மாற்றும் வகையில் அமைந்துள்ளது. துருவ நடத்திரம் படத்தை மும்பையில் பார்த்ததாகவும், படம் கதையாகவும் தொழில் நுட்பரீதியாகவும் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். குறிப்பாக இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் விநாயகன் கவரும் வகையில் நடித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அவருக்கு இயக்குநர் கெளதம் மேனன் தன்னுடைய நன்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 வசூலை நெருங்கும் சூர்யா...3 படங்களின் மொத்த வசூல் இத்தனை கோடியா!
ஜெயிலர் 2 வசூலை நெருங்கும் சூர்யா...3 படங்களின் மொத்த வசூல் இத்தனை கோடியா!
அனிருத் காவ்யா மாறன் உடையை வடிவமைத்தது இவர்தானா! யார் இந்த தருண் தஹிலியானி?
அனிருத் காவ்யா மாறன் உடையை வடிவமைத்தது இவர்தானா! யார் இந்த தருண் தஹிலியானி?
"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகல்? வெற்றிமாறனின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்
அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகல்? வெற்றிமாறனின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
"மீனவர்களே உடனே கரை திரும்புங்க" - வங்கக்கடலில் உருவாகும் புயல்? திருவள்ளூருக்கு அவசர எச்சரிக்கை
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
"Diversion politics, துணிச்சல் இல்லாத முதல்வர்" - எதிர்க்கட்சித்தலைவர் கடும் தாக்கு!
Embed widget