Innasi Pandiyan: மாணவி சத்யஸ்ரீ மரணம்.. தூக்கமே போச்சுங்க.. ட்விட்டரில் பொங்கிய டைரி பட டைரக்டர்!
கல்லூரி மாணவி சத்யஸ்ரீ மரணம் குறித்து டைரி படத்தின் இயக்குநர் இன்னாசி பாண்டியன் உருக்கமான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கல்லூரி மாணவி சத்யஸ்ரீ மரணம் குறித்து டைரி படத்தின் இயக்குநர் இன்னாசி பாண்டியன் உருக்கமான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்னாசி பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் சத்யஸ்ரீக்கு இறுதிச்சடங்கு செய்யும் வீடியோவை பகிர்ந்து, “தூக்கம் தொலைத்த இரவு இனி திரைப்படங்களில் விருப்பம் இல்லாத பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்கும் கதைகளை அப்புறப்படுத்துவது காலத்தின் கட்டாயம்” என பதிவிட்டுள்ளார்.
தூக்கம் தொலைத்த இரவு😭 இனி திரைப்படங்களில் விருப்பம் இல்லாத பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்கும் கதைகளை அப்புறப்படுத்துவது காலத்தின் கட்டாயம்🙏 #Sathya pic.twitter.com/UAGdMuHmKv
— Innasi Pandiyan (@innasi_dir) October 15, 2022
சென்னை பரங்கிமலையில் உள்ள ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் சத்யஸ்ரீ என்ற கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து சதீஷ் என்ற இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர்.
இதுதொடர்பாக நடந்த விசாரணையில், ஆதம்பாக்கம் ராஜா மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவலரின் மகனான சதீஷூம், அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் பெண் தலைமை காவலரின் மகளான சத்யஸ்ரீயும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இருவரின் நட்பானது படிப்படியாக வளர்ந்து காதலாக மாறியதாகவும், ஒரு கட்டத்தில் அக்காதலை சத்யா முறித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
View this post on Instagram
இதனிடையே வழக்கம்போல கல்லூரி செல்வதற்காக சத்யா பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த சதீஷ் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் கடற்கரை நோக்கி செல்லும் ரயில் நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தப்போது சத்யாவை பிடித்து சதீஷ் தள்ளியுள்ளார். இதில் ரயிலில் சிக்கிய சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சதீஷை பிடிக்க முயற்சிப்பதற்குள் அவர் அங்கிருந்து தப்பியோடினார். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் துரைப்பாக்கம் அருகே பதுங்கியிருந்த சதீஷை நள்ளிரவில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் அக்டோபர் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சத்யா இறந்த துக்கம் தாங்காமல் அவரது தந்தை ராஜமாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.இதனால் குற்றவாளி சதீஷூக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.