Gautham Vasudev Menon: ‛ப்ளூ சட்டை மாறனை இறங்கி செய்யணும்’ -கொந்தளித்த கௌதம் மேனன்!
எங்களது முந்தைய படமான அச்சம் என்பது மடமையடா படத்தில் கிடைக்காத ஒத்துழைப்பு இப்படத்தில் கிடைத்தது. பொதுவாக நான் விமர்சனங்களை படிப்பதில்லை.
உருவகேலி தொடர்பாக நடிகர் சிலம்பரசனை கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு இயக்குநர் கௌதம் மேனன் பதிலடி கொடுத்துள்ளார்.
சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”.. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதியான தியேட்டர்களில் வெளியானது. முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
எதிர்பார்த்தை போல படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. 4 நாட்கள் முடிவில் வெந்து தணிந்தது காடு சுமார் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடந்து நேற்று முன்தினம் படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிம்பு எனது முந்தைய படங்களில் எனது எடையை வைத்து கேலி செய்தவர்களால் இந்தப்படத்தில் அதை செய்ய முடியவில்லை என்று பேசி இருந்தார்.
உருவகேலி செய்வது தவறு - சிம்பு.
— Blue Sattai Maran (@tamiltalkies) September 19, 2022
Dum 2003 Movie - Kannamma Kannamma song lyrics:
வாடி பொட்ட புள்ள. வளஞ்சு நெளிஞ்சி போற புள்ள..
கண்ணடிச்சி பாத்தாலும்
கண்டுக்கல...
உன் கற்பு போகும்படி இப்போ என்ன ஆயிடுச்சு?
பொட்டபுள்ள, கற்பு. Great respect for tamil women given by Simbu. pic.twitter.com/wurDhvA2ie
இதற்கு பதிலடி தரும் வகையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில் சிம்புவின் முந்தைய பாடல்களை சுட்டிக்காட்டி பெண்களை இவ்வளவு கீழ்த்தரமான வரிகளால் காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். இதற்கு என்ன பொருள் மிஸ்டர் சிம்பு. பாடலாசிரியர் மீது மட்டும் பழிபோட வேண்டாம் என தெரிவித்திருந்தார். இது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. பலரும் ப்ளூ ச்சட்டை மாறனுக்கு தனது கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இயக்குநர் கௌதம் மேனனிடம் சிம்பு சொன்ன உருவகேலி கருத்து குறித்தும், சினிமா விமர்சகர்கள் சொன்னதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு கௌதம், சிம்பு இந்த உடல் எடையில் மாற்றம் செய்த விஷயம் எளிதானது கிடையாது. எந்தளவுக்கு டெடிகேஷனோடு பண்ணாருன்னு எனக்கு தெரியும். அவர் உடல் எடை குறைத்த சமயத்தில் தான் நான் கதை சொல்ல போனேன்.
எங்களது முந்தைய படமான அச்சம் என்பது மடமையடா படத்தில் கிடைக்காத ஒத்துழைப்பு இப்படத்தில் கிடைத்தது. பொதுவாக நான் விமர்சனங்களை படிப்பதில்லை. ஆனால் நேற்று நடந்த விஷயத்தைப் பார்க்கும் போது ஒரு சில விமர்சனங்களை படித்து மக்கள் படம் பார்க்க வருவதில்லையோ என்ற கேள்வி எழுகிறது. எப்பவும் எனக்கு நெகட்டிவ் விமர்சனங்களே அதிகம் வரும். ஆனால் வெந்து தணிந்தது காடு படத்துக்கு 80% பாசிட்டிவ் விமர்சனமே வந்துள்ளது.
நான் உங்களை விமர்சனம் பண்ண வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் அதை ஏன் மரியாதையாக செய்யலாமே. நீங்க எதிர்பார்த்ததை ஏன் விமர்சனமா கொடுக்குறீங்க. நான் என்ன பண்ணிருக்கனோ அதை மட்டுமே சொல்லுங்க. இந்த படம் இப்படி இருந்திருந்தா நல்லாருக்கும்ன்னு சொல்லுறதெல்லாம் முட்டாள்தனமான விஷயம். எனக்கு ப்ளூ சட்டை மாறன் மேல அவ்வளவு கடுப்பு, வெறுப்பு. இளக்காரமா அவ்வளவு தரக்குறைவா ஒரு படத்தை விமர்சனம் செய்வது அவரது யூட்யூப் சேனலுக்கு ஸ்பான்சர் கிடைக்க செய்றது. நீ விமர்சனம் பண்ணு. ஆனால் அதை ஒரு இளக்காரமா, தரக்குறைவா பண்ணாத.
திருச்சிற்றம்பலம் படத்தோட விமர்சனத்தையே பார்த்த போது முதல் 10 நிமிடங்கள் படத்தை கழுவி ஊற்றி விட்டு கடைசியில் நல்லா இருக்குன்னு சொல்லிருப்பாரு. இதையெல்லாம் பார்க்கும் போது இறங்கி ஏதாவது செய்யலாம் அப்படிங்கிற அளவுக்கு கோபம் வருது என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.